Wednesday, November 10, 2010

[lyric] நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ

பாடல் : நெஞ்சில் நெஞ்சில்
படம் : எங்கேயும் காதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : பிரபு தேவா
___________________

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ

மாலை வேளை வேலை காட்டுதோ - என்
மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

என் நிலாவில் என் நிலாவில் - ஒரு
மின்சாரல் தான் தூவுதோ?
என் கனாவில் என் கனாவில் - உன்
பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்
___________

ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும்
மொழியில் எதுவும் கவிதையடி!
அசையும் இமையின்
இசையில் எதுவும் இனிமையடி!

வெண் மார்பில் படரும்
உன் பார்வை திரவம்
இதயப் புதரில்
சிதறிச் சிதறி வழிவது ஏன்?
உதிரும் துளியில்
உதிரம் முழுதும் அதிர்வது ஏன்?

உருகாதே உயிரே
விலகாதே மலரே!
உன் காதல் வேரைக்
காண வேண்டி
வானம் தாண்டி
உனக்குள் நுழைந்த… (நெஞ்சில்…)
___________________

பசையூறும் இதழும்
பசியேறும் விரலும்
விரதம் முடித்து
இரையை விரையும் நேரமிது!
உயிரின் முனையில்
மயிரின் இழையும் தூரம் அது!

ஒரு வெள்ளைத் திரையாய் - உன்
உள்ளம் திறந்தாய்
சிறுகச் சிறுக
இரவைத் திருடும் காரிகையே!
விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே

விடியாதே இரவே!
முடியாதே கனவே!
நீ இன்னும் கொஞ்சம்
நீளக் கோரி
காதல் காரி
துடிக்க துடிக்க (நெஞ்சில்…)

21 comments:

Karthiga Ramamurthy said...

I dint hear this song yet... but lines are too good... next work is to hear this song only.. Good work..

Prabu M said...

உங்கள் வரிகளில் ததும்பும் புத்துணர்வும், புதிதான தனித்துவமும் கண்கூடாகத் தெரிகிறது...
உண்மையாக நான் இன்னும் எந்திரனின் கணிணித்தமிழ் காதல்வரிகளிலிருந்தே மீளவில்லை....
பைனரியில் பூவாசம்... நீலக்கண்ணோரம் மின்சாரம் பறிப்பேன்... நீலப்பல்லாலே உன்னோடு சிரிப்பேன்... பவர்தான் உண்டு திமிரே இல்லை... என ரோபோவின் வரியில் எந்திரனுக்குள் இயங்கும் சூப்பர்ஸ்டாரை ஹைலைட் செய்தது... சூப்பர்ப் :)

//வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம்இதயப் புதரில்சிதறிச் சிதறி வழிவது ஏன்?உதிரும் துளியில்உதிரம் முழுதும் அதிர்வது ஏன்?//

ஹாரிஸின் மெட்டுக்காக‌ எதிர்பார்ப்பைத் தூண்டுகிற‌து.... வாழ்த்துக்க‌ள்

VINAY SRIRAM said...

awesome lines sir....truly inherited somethin soooo grt from your dad.....d words hav sooo much of emotions attached to it....n loved d way u toyed wid science and love in IRUMBILE.....good work sir...keep it goin...all d best.....

C.M.Lokesh said...

அற்புதமான வரிகள்! நீங்கள் இதுவரை எழுதிய பாடல்களுக்கும் இந்த பாடலுக்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது. இந்த பாடலில் கற்பனைகள் சங்கிலி கோர்வையாய் அமைந்துள்ளது (ரிதம் திரைப்படத்தில் இடம் பெற்ற தனியே தன்னந்தனியே பாடலை போல). கற்பனைகளும் அற்புதம். இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை
"சிறுகச் சிறுக
இரவைத் திருடும் காரிகையே!
விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே"

இந்த பாடலில் எல்லா வரிகளும் அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய வரிகளாய் அமைந்துள்ளது. வாழ்த்துகள்!!!

Siddaarth said...

lovely lyrics .. just love it!

vizhii said...

உருகாதே உயிரே
விலகாதே மலரே!

அமைதியான அழகான பாடல் வரிகள் சார் எனக்கு மிகவும் பிடித்திருந்தது :)

vizhii said...

உருகாதே உயிரே
விலகாதே மலரே!
அமைதியான பாடல் வரிகள் சார் எனக்கு மிகவும் பிடித்திருந்தது :)

அ. முஹம்மது ஆசிஃப் said...

hi karky.. i hv lookin after irumbile oru irudhayam wat gone b ur work.. wen i read d lyric on nenjil nenjil it brought me to look for ur blog and found... nice lyrics... a unique of using tamil words is very nice... keep rocking...

manathu.com said...

வணக்கம்.
இரவைத் திருடும் காரிகையே!
விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே

இந்த வரிகளில் கார்க்கி நிற்கிறார்
வளர்க

வெள்ளித்திரையில் பாடல் ஒளியேறும்போது கவிஞரின் பெயரைக் காட்டினால் மிக மிக சிறப்பாக இருக்கும்
எந்த இயக்கிநர் முந்தி இதைச் செய்யப்போகிறார்
வாழ்த்துகள்

மனஹரன், மலேசியா

பின் குறிப்பு அப்பாவின் பாடவா உன பாடலைப்பற்றி கொஞ்சம் பேச வேண்டும் பாடலை நீங்களும் மீண்டும் ஒரு முறை கேட்டுப்பாருங்கள்

sarath said...

Brilliant!

Girish said...

நல்ல வரிகள்
ஜுவாலை என்னும் சொல்லுக்கு அர்த்தம் என்ன? நானும் தேடி தேடி பார்த்துவிட்டேன், கிடைக்கவில்லை

sudha said...

really awesome...

Indhu said...

Really describes about the sweet happenings between a love girl and love boy. You lines are fresh and contemporary.

Lakshminarayanan S said...

Just listened to KO songs...

குவியமில்லா காட்சிப்பிழை, நிழலைத் திருடும் மழலை...ஆஹா - இதுவல்லவா தமிழ்...கார்க்கி வாழ்க..

@Girish
ஜுவாலை means flames (fire)

Lakshminarayanan S said...

Just listened to KO songs -

"குவியமில்லா காட்சிப்பேழை, நிழலைத் திருடும் மழலை நானோ" - Simply amazing...

"என் கனாவில் என் கனாவில் - உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்" - ஆஹா, இதுவல்லவா தமிழ் - கார்க்கி வாழ்க.

ப்ளேனோ தமிழ்ப் பள்ளி said...

hai
when i did my thesis, i found more than 300 new tamil words from ur father's kavithaikal.

Really u r ARPUTHAM in words Madhan.And want to poin out the AZHKARIVU words,
Nilavu Nadai,enbam thirudu,bimabath thukal, edhayap pudhar,kadhal ver, uyirin munai,kadhal kaari,and ill follow ur padalkal all the time.im a biggggggggggest fan of ur dad from my 8th grade. then in my college i switched over to tamil from english lit because of his poems.then i did my phd too.thats y i came to know about u..... i patti is excellant .try to see my facebook video of my daughter. Thanks. Chitra

G..R.. said...

ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும் மொழுயில் எதுவும் கவிதையடி....

ஆஹா அற்புதம்....
உயிரை வருடி உணர்வைத் திருடும் உண்மை வரிகள்....

வாழ்த்துக்கள் கார்க்கி...
facebook.com/ManoGautam

Shunmugam said...

Hi,
nice lyrics..
ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும்
மொழியில் எதுவும் கவிதையடி!
அசையும் இமையின்
இசையில் எதுவும் இனிமையடி!

விடியாதே இரவே!
முடியாதே கனவே!
நீ இன்னும் கொஞ்சம்
நீளக் கோரி
காதல் காரி
துடிக்க துடிக்க..

good one!

அழைக்காதே பெண்ணே எந்தன்
அச்சங்கள் அச்சாகும்

சத்த சத்த நெரிசலில் உன் சொல்
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ?

நிழலை திருடும்
மழலை நானோ?
arumai !

Ramkumar G Krish said...

oh god...nenjil nenjil..lines made me to remember AU luve..hmm,. OMG..Second stanza...chinamayee voice has gone into romantic top gear....

rasa.ganesan said...

ரா.ச.கணேசன்

பனியில் குளித்த
குளிர்ச்சியான வரிகள் :

ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும்
மொழியில் எதுவும் கவிதையடி!

விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே

நீ இன்னும் கொஞ்சம்
நீளக் கோரி
காதல் காரி
துடிக்க துடிக்க..

rasa.ganesan said...

வணக்கம் கார்க்கி அண்ணா
ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்

இரவைத் திருடும் காரிகையே!
விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே

நீ இன்னும் கொஞ்சம்
நீளக் கோரி
காதல் காரி
துடிக்க துடிக்க..





பனியில் குளித்த
குளிர்ச்சியான வரிகள்
ரா.ச.கணேசன்