Wednesday, November 07, 2012

[lyric] எனை எனை தீண்டும்Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
எனை எனை தீ ண்டும் 
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : ஹரிசரண், மஹதி 
________________________________________


எனை எனை தீண்டும் 
தனிமையும் நீயா?
அருகிலே கேட்கும் 
அமைதியும் நீயா?

விழிகளை நான் மூட
கனவிலே நீயா?
திறந்ததும் நீ இல்லா
வெறுமையும் நீயா?

ஏன் எனை என் மனம் கேட்காதது ஏன்?
தருக்கங்களை பார்க்காதது ஏன்?
உருக்கும் ஒரு காதல் உணர்ந்தேன்!

#


அருகினில் குதிக்கிற அருவியிலே - தலை
குளித்ததும் உலர்த்திடும் சிறகினிலே 
சிலிர்த்திடும் சருகுகள் மொழியினில் கேட்பவன் நீ

திரிமுனை எரிந்திடும் அழகினிலே - அதில் 
முதல் முறை நெகிழ்ந்திடும் மெழுகினிலே
விழுந்திடும் இளகிய அழுகையில் காண்பவன் நீ


என் மார்பில் மோதும் - ஒரு
மென் மேகம் ஆனாய்
கண் மூடி நின்றேன் - நீ 
எங்கோடிப் போனாய்?


ஏன் எனை என் மனம் கேட்காதது ஏன்?
தருக்கங்களை பார்க்காதது ஏன்?
உருக்கும் ஒரு காதல் உணர்ந்தேன்!

#


ஓடையின் தெள்ளிய நீர்த்துளி நீ - ஒரு 
பூவினின்றள்ளிய தேன் துளி நீ
நாவினில் தமிழென நாளும் 
இனிப்பவன் நீ

இமைகளில் மியிலிறகானவன் நீ - என்
இதழினில் விழுகின்ற பனித்துளி நீ
இதயத்தை வருடிடும் உணர்வுகள் 
யாவிலும் நீ


என் தேகம் பாயும் - ஒரு 
உற்சாகம் நீயா?
சந்தேகம் இன்றி - என்
கண்ணீரும் நீயா?


ஏன் எனை என் மனம் கேட்காதது ஏன்?
தருக்கங்களை பார்க்காதது ஏன்?
உருக்கும் ஒரு காதல் உணர்ந்தேன்!
_________________________________________


[lyric] விட்டு விட்டுத் தூவும்


Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
விட்டு விட்டு
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : ராகுல் நம்பியார், பார்கவி 
_________________________________________விட்டு விட்டுத் தூவும்
வெட்கங்கெட்ட வானம்
கிட்டத் தட்ட என் நெஞ்சமோ?

முட்ட வந்த பூவின்
முட்கள் குத்தும் என்றே
வட்டமிட்ட வண்டஞ்சுமோ?


சொல்லாமல் மோதும் 
சில்லென்ற காற்றைப் போல நீயும் வந்தாய்
நில் என்ற போதும்
நில்லாமல் ஆடைக்குள்ளே நீ புகுந்தாய்

கல்லொன்று வீசி 
உள்ளத்தின் ஆழம் என்ன தேடுகின்றாய் 
தெள்ளோடை என்னை
உள்ளங்கையோடு அள்ளி ஓடுகின்றாய்


♂  
மொத்த மொத்த நெஞ்சை 
சத்தமிட்டுச் சொன்னால்
செத்து கித்துப் போவேனடி 

குத்தும் என்று இல்லை
தித்திக்கின்ற தேனில் 
புத்தி கெட்டுப் போவேனடி


நில்லாமல் பேசும் 
நீரோடை போலே என்னுள் பாய்கின்றாய்
புல்லோடு வீழும்
பூவாகி எந்தன் தோளில் சாய்கின்றாய்


பொல்லாத போதை 
என்றாகி என்னுள் ஏறி ஆடுகின்றாய்
செல்லாத பாதை
ஒன்றோடு என்னைக் கூட்டி ஓடுகின்றாய்
________________________________________
[lyric] மேகத்திலே மேலாடை


Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
மேகத்திலே மேலாடை
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : ஷ்ரேயா கோஷல்
___________________________________


மேகத்திலே மேலாடை
காலை நிலா, காலாடை
ஊலலலா உள்ளந்தான்
நானணியும் உள்ளாடை

புல் மீது தூங்குவேன்
அதுவே என் மாளிகை
செல் என்ற பின்புதான்
நகரும் என் நாழிகை 

என் பூமி பூமி அது வேறு
என் விழியால் அதை நீ பாரு
பூமி பூமி அது வேறு
என் விழியால் அதை நீ பாரு


பூ ஒன்று திறக்கும் போது
இமைதட்டிச் சிரிப்பேனே
ஈ மீது பூ உதிர்ந்தாலோ
இரண்டுக்கும் அழுவேனே

தேய்பிறை அதன் சோகம் கண்டால்
தேவதை அதில் ஊஞ்சல் செய்வேன்
தேவைகள் ஏதும் இல்லை என்றால்
தெய்வமே இனி நான் தானே

யாரும் இல்லாத போதில்
சத்தமில்லாமல் காதில்
எந்தன் பேர் சொல்லி காற்றும் வீசும்

பூமி பூமி இது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு
பூமி பூமி அது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு


வானோடு மழை வரக் கூடும்
மின்னல் போடும் மின்னஞ்சல்
புயல் ஒன்றின் தொலைநகலாகும்
இன்று வீசும் மென் தென்றல்

தூறலே குறுஞ்செய்தி ஆகும்
வானவில் பின்னணியில் தோன்றும்
அழைக்கிறாய் ஒரு இரகசியம் சொல்ல
அருவிகள் அழைப்பொலியாகும்

பேச காசேதும் இல்லை
ஊரும் ஏன் பேச வில்லை
ஊடகம் எங்கும் விளம்பரம் உனக்கில்லை


பூமி பூமி இது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு
பூமி பூமி அது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு
_____________________________________
[lyric] Adidas


Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
அடிடாஸ்
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : மனோ
________________________________________அடிடாஸ் மாட்டிக்கோ
அதிரடி காட்டிக்கோ 
அடிக்கடி ஆடிப் பாத்துக்கோ
ramp walking பொண்ணெல்லாம்
நேரில் பாக்குறோம்
அவனுக்கு thanks போட்டுக்கோ
fashion tvல பாத்ததெல்லாம்
வாசம் பாக்கத்தான் விட்டுட்டானே
ஏதும் கேக்காம எல்லாந்தந்து
போதுஞ் சொல்லத்தான் வெச்சுட்டானே

ஹே தல தல சுத்துதே
மூச்சே முட்டுதே
சொர்கங் காட்டிப்புட்டானே
ஹே அட மழ கொட்டுதே
மின்னல் வெட்டுதே
மேகம் ஆட்டிவிட்டானே

அஞ்சாறு வயசோடு போட்டதெல்லாம்
அஞ்சாம பதினெட்டில் போட்டு வந்தா(ள்)
கொஞ்சூண்டு துணியோடு நீயும் நின்னா
யாரு கிட்ட நியாயம் கேப்பேன் கந்தா?

இந்த orange பேண்டோட உன்னப் பாத்தா
fantaந்னு சொல்லுவா எங்க ஆத்தா
தொட்டாலே உஸ்ஸுன்னு சத்தம் போட்டா
நீதானே என் கையில் cocacola

ஹே தல தல சுத்துதே
மூச்சே முட்டுதே
சொர்கங் காட்டிப்புட்டானே
ஹே அட மழ கொட்டுதே
மின்னல் வெட்டுதே
மேகம் ஆட்டிவிட்டானே

axe scent போடாமலே நம்மச் சுத்தி
எக்கச்சக்க பொண்ணு எல்லாம் வந்தாச்சுடா
six seven pack எல்லாம் இல்லாமலும்
chicks எல்லாம் நம்ம மேல சாயும்

அட நம் நேரம் உச்சத்தில் ஏத்திவெச்சான்
எங்கெங்கோ மச்சத்த அச்சடிச்சான்
high heels மாட்டிக்கும் பூவ எல்லாம்
ஐய்யோ என் தோட்டத்தில் நட்டு வெச்சான் 

ஹே தல தல சுத்துதே
மூச்சே முட்டுதே
சொர்கங் காட்டிப்புட்டானே
ஹே அட மழ கொட்டுதே
மின்னல் வெட்டுதே
மேகம் ஆட்டிவிட்டானே

____________________________

[lyric] தெய்வத்தப் போல


Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
தெய்வத்தப் போல
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : ஹேமசந்திரன் 
___________________________________________


தெய்வத்தப் போல
அம்மான்னு சொன்னா
இல்லாம போனா....
குப்பையின்னு என்ன
கொட்டீட்டுப் போனா
சொல்லாம போனா....
உனக்கோ... நான் அழுவேன்
எனக்கு... யார் இருக்கா?
ஒரு நாள் தூங்க 
மடிய கேட்டேன் தாம்மா...


பூச்சிக்குக் கூட
அம்மா இருக்கே
சாப்பாடு ஊட்ட
வேறொண்ணும் வேணா
நீ மட்டும் போதும்
பாசத்தக் காட்ட
தொலைவா... நீ போயிட்ட
வரவே... நீ மாட்ட
தூக்கித் தழுவ 
ஒரு நாளாச்சும் வாம்மா...