Tuesday, November 30, 2010

[lyric] தீ தீராதே

பாடல் : தீ தீராதே
படம் : சிங்கையில் குருஷேத்திரம்
இசை : முகமது ரஃபி
இயக்கம் : தவமணி
______________________

தோழா!

தீ தொட்டால் பட்டால்

சுட்டால் அஞ்சாதே!


நீயாடு தோழா!

ஓ முட்டுக் கட்டை

இட்டால் அஞ்சாதே!


காலோடு தோழா!

Gravity மாத்தி

விட்டால் அஞ்சாதே!


ஒஹோஹோ தோழா!

Graffiti போட்டா

வானம் மிஞ்சாதே!


தீ தீராதே உன்னுள் தீ தீராதே!

தீ தீராதே ஒருபோதும் நீ தீ தீராதே!

_____________________

ஏழும் சனிக்கிழமை

போதை பிறப்புரிமை

பாதை கொஞ்சம் திருத்தியமை

எங்கள் இளமை எங்கள் அடிமை


நாங்கள் நடனப்படை

நாளும் நிலவுநடை

நாடிக்கேது வேகத்தடை

எங்கள் வானில் ஏது ஒட்டடை


நெஞ்சில் அச்சம் இல்லை

இலட்சியங்கள் தொல்லை

பூமிக்குள்ளும் சென்று

விரியும் எங்கள் எல்லை


அன்னை தந்தை இல்லை - நாம்

கண்ணீர் விட்டதில்லை

நண்பன் கொண்ட யாரும்

அனாதை ஆனதில்லையே!

___________________

மூளை முடக்கிவிடு

தேகம் முடுக்கிவிடு

வேதனைகள் முடித்துவிடு

இந்த இரவில் இன்பம் திருடு!


நேற்றை மறந்துவிடு

காற்றில் பறந்துவிடு

கோபதாபம் திறந்துவிடு

உன்னை வெளியிலே திரையிடு!


சாலை உந்தன் வீடு

நீயே உந்தன் ஏடு

மேடை ஏறும் போது

சட்டங்கள் உதவாது


சத்தங்கொஞ்சம் கூட்டு - உன்

பித்தங்கொஞ்சம் காட்டு

பூமி மொத்தம் தூக்கி

பந்தாட்டம் ஆடு கூட்டாளி!

____________________________


5 comments:

sivaG said...

nice lyrics karky. All the best.

Balakumaran Lenin said...

//அன்னை தந்தை இல்லை - நாம்
கண்ணீர் விட்டதில்லை
நண்பன் கொண்ட யாரும்
அனாதை ஆனதில்லையே! //


nice lines!!! luv it!!

மதி said...

ஏழும் சனிக்கிழமை !

loved the way how crisply and poetically this one line talks about the whole feel. good one karky .. keep going

Siddaarth said...

inciting lyrics!

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

wow!!!!!!!!!!!!!greattttttttttttt