Tuesday, November 30, 2010

[lyric] தீ தீராதே

பாடல் : தீ தீராதே
படம் : சிங்கையில் குருஷேத்திரம்
இசை : முகமது ரஃபி
இயக்கம் : தவமணி
______________________

தோழா!

தீ தொட்டால் பட்டால்

சுட்டால் அஞ்சாதே!


நீயாடு தோழா!

ஓ முட்டுக் கட்டை

இட்டால் அஞ்சாதே!


காலோடு தோழா!

Gravity மாத்தி

விட்டால் அஞ்சாதே!


ஒஹோஹோ தோழா!

Graffiti போட்டா

வானம் மிஞ்சாதே!


தீ தீராதே உன்னுள் தீ தீராதே!

தீ தீராதே ஒருபோதும் நீ தீ தீராதே!

_____________________

ஏழும் சனிக்கிழமை

போதை பிறப்புரிமை

பாதை கொஞ்சம் திருத்தியமை

எங்கள் இளமை எங்கள் அடிமை


நாங்கள் நடனப்படை

நாளும் நிலவுநடை

நாடிக்கேது வேகத்தடை

எங்கள் வானில் ஏது ஒட்டடை


நெஞ்சில் அச்சம் இல்லை

இலட்சியங்கள் தொல்லை

பூமிக்குள்ளும் சென்று

விரியும் எங்கள் எல்லை


அன்னை தந்தை இல்லை - நாம்

கண்ணீர் விட்டதில்லை

நண்பன் கொண்ட யாரும்

அனாதை ஆனதில்லையே!

___________________

மூளை முடக்கிவிடு

தேகம் முடுக்கிவிடு

வேதனைகள் முடித்துவிடு

இந்த இரவில் இன்பம் திருடு!


நேற்றை மறந்துவிடு

காற்றில் பறந்துவிடு

கோபதாபம் திறந்துவிடு

உன்னை வெளியிலே திரையிடு!


சாலை உந்தன் வீடு

நீயே உந்தன் ஏடு

மேடை ஏறும் போது

சட்டங்கள் உதவாது


சத்தங்கொஞ்சம் கூட்டு - உன்

பித்தங்கொஞ்சம் காட்டு

பூமி மொத்தம் தூக்கி

பந்தாட்டம் ஆடு கூட்டாளி!

____________________________


Wednesday, November 10, 2010

[lyric] நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ

பாடல் : நெஞ்சில் நெஞ்சில்
படம் : எங்கேயும் காதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : பிரபு தேவா
___________________

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ

மாலை வேளை வேலை காட்டுதோ - என்
மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

என் நிலாவில் என் நிலாவில் - ஒரு
மின்சாரல் தான் தூவுதோ?
என் கனாவில் என் கனாவில் - உன்
பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்
___________

ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும்
மொழியில் எதுவும் கவிதையடி!
அசையும் இமையின்
இசையில் எதுவும் இனிமையடி!

வெண் மார்பில் படரும்
உன் பார்வை திரவம்
இதயப் புதரில்
சிதறிச் சிதறி வழிவது ஏன்?
உதிரும் துளியில்
உதிரம் முழுதும் அதிர்வது ஏன்?

உருகாதே உயிரே
விலகாதே மலரே!
உன் காதல் வேரைக்
காண வேண்டி
வானம் தாண்டி
உனக்குள் நுழைந்த… (நெஞ்சில்…)
___________________

பசையூறும் இதழும்
பசியேறும் விரலும்
விரதம் முடித்து
இரையை விரையும் நேரமிது!
உயிரின் முனையில்
மயிரின் இழையும் தூரம் அது!

ஒரு வெள்ளைத் திரையாய் - உன்
உள்ளம் திறந்தாய்
சிறுகச் சிறுக
இரவைத் திருடும் காரிகையே!
விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே

விடியாதே இரவே!
முடியாதே கனவே!
நீ இன்னும் கொஞ்சம்
நீளக் கோரி
காதல் காரி
துடிக்க துடிக்க (நெஞ்சில்…)

Friday, September 17, 2010

[research] Top 100 words used in Tamil lyrics


The question was 'can we give a freshness score to a new lyric?' Freshness is again a subjective term like sweetness, which i blogged about a year back. Unused words, new coinages, comparisons, thoughts and many more can be attributed to freshness of a lyric. We wanted to find the most commonly used words, comparisons and rhymes. This list provides the top 100 words used in Tamil lyrics.

The list is based on our analysis of 1000 lyrics, a very small sample. Ranking may change when more lyrics are included for analysis.


Friday, August 20, 2010

[lyrics] Feedback for my Endhiran Lyrics

gauti_au

@madhankarky Hello bro the lyrics of Irumbile are superb and oh boy it does bring that Robotic feel too..Take a bow bro :) superb work


whattsupdoc

i am a fan! awesome lyrics in #endhiran... @madhankarky


hkp1611

@madhankarky Hats off to you sir, for blending engineering and music... i never thought they blend as well as you made them to be...


sundarkumarp

@madhankarky is it sth similar to ARR's way of muzic mking?.Many catchy words/linked intelgntly/multi-layered(smlr to Photoshp/aCAD etc)/new


RajinikanthK

@madhankarky if you were the lyrcist of "En'ran" - impressive!! All kinematics redundancy of robot covered in thelyrics ;-)Gd "asmivo" job


mshunmugam

@madhankarky Irumbile Oru Irudhaiyam.. nice lyrics.. best wishes... !


vrhariharun

@madhankarky hi madan anna ur songs are super ......sply Boom boom robo da ....cong anna great.......


kinglyscience

@madhankarky "IRUNBILE ORU IDHAYAM " SUPERB!!


itsboomi

@madhankarky "செல்லெல்லாம் சொல்லாகி கவிதைகள் வடித்தேன்" - சூப்பர்


AishwaryaFanNo1

@madhankarky I'm sure it's Benny! But Lady K&K rocked the track. And your lyrics. No wonder it's topping the charts everywhere! :)


prabhakarvks

So something special you need. Follow the legend Vaira Muttu Sir's Son. The Irumbile Oru Idayam and Boom Boom Robo da lyricist @madhankarky


harish_subu

Director Shankar praises @madhankarky for both his songs-irumbilae oru idhayam and BOOM BOOM.my favourite is Irumbilae oru idhayam.#endhiran


Arivumani

@madhankarky yaya karky, Eargerly expecting ur next projs./Read Nakeran interview-verynice/.ur purely tamil&eng creative lyrics awsome-robot


vishwak13

@madhankarky Wow! thts great... i am listening to the songs and i liked the irrumbil oru idhayam... loved the lyrics... superb work...


shaanfugo

@madhankarky congrats madhan...my initial fav was irumbile only, but now swapped to boom..boom..:) issac newtonin leelai line, masterclass..


Arunmozhidevan

@madhankarkyகட்டளை ஏற்றிடும் எந்திரமோ விருதுகள் பதவிகள் வாங்காது சட்டம் விதிகளை மீறாப் பொறிகள் புகழுக்கென்றும் ஏங்காது excellent lines


incredibala

@madhankarky Not sure if you wrote the English lyrics for Irumbile Oru Irudhayam or if it is Kash n' Krissy but it could've been better imo. The (tamil) lyrics for the 2 songs you have penned for Endhiran are really good. Certain lines brings a smile on my face.


Arivumani

@madhankarky Hi really u r rocking & proved urself that u r a better competitor for ur father and the best companion for Tamil.


geethapriyakris

@madhankarky "Irumbile Oru Idhaiyam" - Very Nice Sir.


vivaji

தமிழ் சினிமா குழந்தைகளைக்கெடுக்கிறது, ஆமாம் என் பையன் ரோபோடா பாட்டு ஆர்வத்துடன் போடச் சொல்றார் @madhankarky தமிழ் வளர்க்கும் சினிமா


lohithharris

@madhankarky echil illa endhan mutham sarchai indri kollvaaya | rattham illa kathal endru otthi poga solvaaya superb lyrics sir...


harish512

@madhankarky sir gr8 lyrics.... hope the dialogues ll be awesome.


anbudan_BALA

@madhankarky நல்லாருக்கு மதன், சொற்களின் தேர்வு, "டெலிஃபோன் மணி" ஞாபகம் வந்தது :)


vanampadi

கூகுள்கள் காணாத தேடல்கள் என்னோடு :D @madhankarky #popculture #endhiran


dskphoton

@madhankarky S sir :) lyrics are really refreshing


sanakannan

@madhankarky எந்திரனில் இரும்பிலே ஓர் இதயம் பாடல் மட்டும் தான் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. வாழ்த்துகள்.


talsur2002

@madhankarky loved the lyrics of irumbile oru idhayam really that sounded like robot words congrats


sathiya11

@madhankarky sir, you wrote the rap part of irumbile oru idhayam ? ? awesome ! sir in the line "poojiyam ondrodu" u mean the binary digits or? :)


mirchichn983

@madhankarky - it is brilliant work sir! Congrats from the listeners and team of Radio Mirchi!


vivaji

@parisalkaaran @madhankarky ஆனால் பிடித்த ஒர் வரின்னா அது 'ஒருவனின் காதலில் பிறந்தவனோ'


parisalkaaran

1) தவமின்றி வரங்கள் தருவதால் ‘மின்சார’ கண்ணனோ 2) சாதல் இல்லா சாபம் @madhankarky 16 அடி பாய்ந்த இடங்கள் இவை.. @vivaji


parisalkaaran

@madhankarky குட்டிகுட்டி பட்டனில் வாய்மூடும் காதலி இதுபோல் கிடையாதோ-வரிக்கு @nandinikarkyகிட்ட திட்டுவாங்கினீங்களா? :-)


srikudev

@madhankarky Congrates for being part of success songs. Its really like by my mom and neice. Great magic from a.r rahman.


StevenRaj

@madhankarky You've done great job..."Irumbile Oru Idhayam" & "Boom Boom Robo da" - lyrics really good - All the best!!!!


spinesurgeon

@madhankarky Well deserved Applause, I should say. And I find that songs appealing to kids more.


mu75

@madhankarky பவர்தான் உண்டு திமிரே இல்லை.. loved this one..


HariKrishnanK

@madhankarky Its is a synergy of ur lines with ARR's Techno music. Luvly album & Kudos to you and your father.Wish him kindly on my behalf


mu75

@madhankarky Boom Boom Roba da will be a great hit among kids. My 2 year old sings boom boom bobo va :) and elder's fav is that too :)


murali002

@madhankarky to b frank never expected such lyrics from u gr8 lyrics.amazing.congrats...but best is vairamuthu sirs arima and puthiyamanidha


lohithharris

@madhankarky liked the lyrics in irumbile song especially about robo kiss


mcmadhan

@madhankarky Irumbile is lovely.. yes, it's youngster's pick.. :)


Athinivas

@madhankarky Really goood lyrics in irumbile sir ...i like it tooo very much ...it willl be topper of album


sathiya11

@madhankarky first time am noticing in tamil cinema where the songs have lots of technical and scientific terms... =) sir awesome lyrics.... looking forward for ur dialogues along with sujatha sir's ....


prabu_m

@madhankarky Thank you Madhan for delighting us with your unique fresh lyrics for our Superstar... Superb songs:) one Padayappa salute for U


urapvr

@madhankarky சாதல் இல்லா சாபம் <>


anandkumarp

RT @parisalkaaran: ‘ஆட்டோ ஆட்டோக்காரா-ஆ ஆட்டோமேடிக் காரா கூட்டம் கூட்டம் பாரு-உன் ஆட்டோக்ராஃபுக்கா?’ -@madhankarky #எந்திரன்


zenofzeno

@madhankarky both ur #endhiran songs are so cool!much awed to see romantic sci fi songs!lts of kudos to creativity!


Arun_raghavn

@madhankarky sir u rocked in boom boom song. .you'll surely get best upcomin lyricist award next year.


harish_subu

both the songs of @madhankarky r too good.. especially Irumbilae oru Idhayam.. awsome.. thanks Mr.Karky.. #Endhiran


shakkthi11

@madhankarky irumbile oru idhaiyam endru ezudiyatho neengal, athai kethu kethu urugiyathe engal anaivarin idhaiyamum . HAPPY FRIENDSHIP DAY


nchokkan

உதாரணமாக, ‘பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம்’, எச்சில் இல்லா முத்தம், ரத்தம் இல்லாக் காதல் ... Good job @madhankarky


tharagai

@madhankarky Is this the 1st time that an Appa & Makan team had scored > 3/4th of the lyrics in any Indian film-Enthiran?Way 2 go Madhan:-)


asoundstory

@madhankarky இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ முதல்முறை காதல் அழைக்குதோ பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு....good work


smartreports

@madhankarky This is the best song of the album in my view. This is definitely not flattery, just plain opinion. Congrats Madahan. Well done


pradepkumar

@madhankarky Great lyrics for both songs. Loved ' Sensor ellam theya theya naan unnai padithen' & ' Power thaan undu thimire illai'


praveenc85

@madhankarky Good work Karki. #Enthiran lyrics are awesome. Need to listen few more times to get into it completely ;)


nsaktheeswaran

@madhankarky really the lyrics are apt for a sci-fic movie,also along with ARR its rocking


HariKrishnanK

Lyrics with life :) for #Endhiran thanks to vairamuthu and @madhankarky


Gaya3Laxman

@madhankarky Sir! Irumbile oru ithayam is too gud by lyrics,tune and singing! ARR singing ur lyrics!!Cn u ask fr anything more?:) Rock on :)


iamkarki

@madhankarky songs are rocking.. satisfied.


parisalkaaran

என் நீலப்பல்லாலே உன்னோடு சிரிப்பேன் எ இஞ்ஜின் நெஞ்சோடு உன் நெஞ்சை அணைப்பேன் @madhankarky #எந்திரன் - வாலியின் ஞாபகம் வருது! க்ரேட் Lines.


BeYess

depth (abyss?) of poetry! RT @parisalkaaran @madhankarky ‘கூகுல்கள் காணாத தேடல்கள் ன்னோடு’ வரிகளில் நின்றுவிட்டேன். அபாரம்!


dskphoton

@madhankarky sir, awesome fusion of engineerin n imagination :) The way u blended google,sensors to express love :) Really superb work sir:)


parisalkaaran

@madhankarky காலையில் சி.டி. வாங்கி வரிகளைப் படித்தபோது ‘கூகுல்கள் காணாத தேடல்கள் என்னோடு’ வரிகளில் நின்றுவிட்டேன். அபாரம்!


aayilyan

உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி - ------> வாழ்த்துக்கள் பாஸ் :) @madhankarky


jharinarayanan

@madhankarky - I heard the songs... And is in loop since morning.. Iruumbile and Boom Boom Rocks... Boom Boom is already my callertune! :)


mu75

@madhankarky தங்களின் உதவியால்.. கவிஞர் வாலியை ஷங்கர் இந்த படத்தில் இழக்கவில்லை.. நன்றாக உள்ளது.. வாழ்த்துகள்..


Raja_R13

Boom Boom.. ROBO da ROBO da.. Zoom Zoom ROBO da..tanz to @madhankarky bro fa his lyrics.. sema mass.. THALAIVAAAAAAAA!!!!!!!


Nagabadri Dhandapani

including you... penning songs for kids is not a easy task,one who is a kid at heart only can do that:)


Purushoth Mahendran

chitti chitti robot ♥ jus luv it sir !!!!!!


Dhivakar Buddy

sir,songs are really awesome....especially Irumbile Oru Idhaiyam.....


Rasika Vijayakrishnan

congrats sir! awesome songs! :)


Rahul Praba

irumbile oru idhaiyam rockzz and u too sir...:):)


Anandhakumarceg

Ark i like especially the lines "memory'il kumari" and Neela Parkalale sirithen...etc.. Wow ... Great job..


Agilan Sethu

Auto autokaaraa....ye

automatic kara, kootam kootam paru un

autograph kkaa....superb Nandini Karky anne =')


Sunitha Raman

wonderful lyrics.... wild thoughts,adutha thamizh pulavara?jst wait Haiku will lead his dad once he starts his mazhalai...


Lalith Jude

ROCK ON KARKY............... SUPERSTAR'S SUPER POET


Jagan Nath

Hi.. How r u ? May God pour all his blessings upon U both. Madhanji Ur lyrics really rock in Enthiran. All my favs together again ARR, Superstar, Shankar. And you too join my favs club now. Thanx for the unforgettable experience of Enthiran songs !!


Vasanth Ravi

hi anna.....how are u...loved endhiran songs....ur song boom boom robo da and Irumbile Oru Idhaiyam is just amazing......n my fav is is irumbile oru idhayam....awesome lyrics,way to go on ur 1st song......its my favourite in the album.....my best wishes to u.... n am happy its in no.1 album in apple world music top 10.....congratulations.....:)


Kumanan Rajendran

eccil illa enthan mutham sarcai indri kolvaya, ratham illa kathal endru otthi poga solvaya? simply superb


Sneha Murali

Just wanted to say that the songs are brilliant!


Malathy Lingam முகநூலில் என்னையும் தோழியாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி... தமிழ் இளம் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ள செய்யும் "இரும்பிலே ஒரு இதயம்"...


Muthuduraivel Nagamani

Madhan.. Listening to Endhiran.. I thought all songs were penned by the great lyricist Vairamuthu..later figured out that 2 were by you.. phenomenal!!!.. all the best!


Vignesh Kannan

‎"Irumbile oru Idayam" lyrics were fantastic ......"பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு""மெமரியில் குமரியை தனிச் சிறை பிடித்தேன் shutdown-ஏ செய்யாமல் இரவினில் துடித்தேன்""உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி."So nice....Just love it...


Dinesh Kumar

endhiran songs rocks.... no doubt gonna be blockbuster of this year....:)

i feel proud to be student madan sir,


Vijay Krishnan

The Endhiran album is mindblowing!! The best of ARR in recent times, without a hint of doubt, with awesome lyrics by Madan and his dad!

I'm proud to have been a student of the prodigy from the house of the Legend!! Madan sir, you rock! :)


Chandra Annabattula

Madhan!!!..congratulations!..just heard the track..it sounds brilliant.


Sivaswamy Mohanakrishnan

Well done Madhan. Fantastic. Nice tune and lyrics. I am sure it will be well received and hit the top of the charts soon.


Sundar Adhiyagave

Boom Boom Robo da...- Mind blowing Lyrics.

Solvathellam ketu vidum kathalan ithu pol amaiyatho (Hope Nandini's word :) )Thavamintri varangal tharuvathanaley _???_ kannano


Hari Narayanan

Hey, Irumbile Oru Irudhayam and Boom Boom Rocks!! Have already set Boom Boom as my caller tune... Congratulations and Keep Rocking!!! :)


Guru Hariharan

hello Sir,,hw r u! hope ur fine! saw d songs preview tat u wrote! irumbil oru idhayam sung by Rahman and Boom boom robo by Yogi B! my best wishes for this! am sure both songs gonna be a massive hit! esp d one by Rahman! u r so lucky that Rahman selected ur song for his vocals!my best wishes for working in thalaivar's film!keep rocking:)!


Shankar Balachandran said...

Good one... fav lyrics...google gal kaanatha thedalgal ennodu..:)...keep going madhan...thalaivar pattu pattaya kelappattum..:)


ஆயில்யன் said...

//உயிரியல் மொழிகளில்

எந்திரன் தானடி

உளவியல் மொழிகளில்

இந்திரன் நானடி//

:))

எந்திரனுக்கே உரிய பாடல் வரிகள் :)

வாழ்த்துக்கள் பாஸ்!


Sangeetha said...

பூஜ்ஜியம் ஒன்றோடு

பூவாசம் இன்றோடு

:)lovely.. :)All the best.


pagala'k' said...

I can confidently say that this is probably the first song written for a geek-in-love. Well done!


சங்கீதன் said...

/ெமரியில் குமரியை // Misspelled?

தனிச் சிறை பிடித்தேன்

shutdown-ஏ செய்யாமல்

இரவினில் துடித்தேன் /

Attractive.. :)


skii said...

Hi Madhan Karky, congratulations on your Endhiran project... Shankar has found you a replacement of Sujatha.. :-) wish you all success in all your projects and fill the void of Sujatha...


C.M.Lokesh said...

Excellent lines. Especially these lines are great!

எச்சில் இல்லா எந்தன் முத்தம்

சர்ச்சை இன்றிக் கொள்வாயா?

ரத்தம் இல்லாக் காதல் என்று

ஒத்திப் போகச் சொல்வாயா?

உயிரியல் மொழிகளில்

எந்திரன் தானடி

உளவியல் மொழிகளில்

இந்திரன் நானடி

This is how a lyricist should write when Vairamuthu sir is working in the same film. Otherwise people won't recognize the lyrics. Great work. Expecting more from you in future. All the best!!!விஜய் said...

வரிகள் சந்தத்தோடு இயைகிறது

சிங்கத்திற்கு பிறந்தது சிறு நரியாகுமா ?

மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

விஜய்


Naveen said...

Excellent Lyrics sir. Yearning to see the visuals of this song after hearing .. :)


GokulSelvam said...

Great one :)Semma song ... Rehman's voice + Your Lyrics+Rocking Music = MAGICAL :)


சுழியம் said...

//'என் நீலப் பல்லாலே

உன்னோடு சிரிப்பேன்'//

கலக்கல் :-)


vinothkumar said...

nice sir.. best lyrics for மெமரியில் குமரியை

தனிச் சிறை பிடித்தேன்

shutdown-ஏ செய்யாமல்

இரவினில் துடித்தேன்

உயிரியல் மொழிகளில்

எந்திரன் தானடி

உளவியல் மொழிகளில்

இந்திரன் நானடி... song all lines

done....


VSP said...

Nice lyrics in A.R.Rahman voice... Best wishes to Junior Arima.... Keep continue good work with your unique style....


E.Arunmozhidevan said...

Excellent Work . . . Great Opening நீங்கள் முழு நேர பாடலாசிரியராக தொடர வேண்டும் என்பதே என் ஆசை


IV said...

wow... lyrics for the facebook generation!!! not just slang...but very poetic...well done!


D.K.LAKSHMI NARAYAN said...

ur lyrics in enthiran is awesome keep rocking Dr.madhan


Venkat said...

Hi Karky,

Were the lyrics generated via ur lyric engineering tool?

regards,

Venkat


Intelligent Design said...

Hi Madhanji.. All the best for bright career. However heights u achieve in life, dont forget me. I am Jaganath from Karur. Ur fan. Ur combination with my most fav ARR will rock for sure. En neela pallaale (Bluetooth)unnodu siripen. Fine lines - Scientific Tamil


Power Play said...

உக்காந்து யோசிக்கிறிங்களோ....

அருமையான பாடல் வரிகள்..

பாடலை கேட்கும்போதே படக்காட்சிகள் கண் முன் விரிகின்றது...

வாழ்த்துக்கள் நண்பா..

புலிக்கு பிறந்தது பூனை குட்டியாகுமா ?? பலே பலே...

இப்படிக்கு

ரிசாத்


cinefundas.com

Yogi B’s rap and Madhan Karky’s simple lyrics are grasping to senses.


behindwoods.com

"Thottu pesum bothum shock adika thonum.... iravin naduvil battery thaan theerum" makes you want to listen to this more than once. This is easily the pick of the album.


600024.com

Madhan Karky is no slouch when compared to his father Vairamuthu. ‘Irumbile Oru Irudhayam’ is youthful and so is Mr. Karky. “கூகுல்கள் காணாத தேடல்கள் என்னோடு, காலங்கள் காணா காதல் பெண் பூவே உன்னோடு,” stands testimony to the youthful flavor of ‘Kaarki. Not only that, if you think ‘Kaarki’ was all youthful, here is it, “எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொள்வாயா? ரத்தம் இல்லாக் காதல் என்று ஒத்திப் போகச் சொல்வாயா?…………. உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி, உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி……………..”


movies.rediff.com

You can't help but smile at phrases where the robot "fails to shutdown" at night. Lyricist Karki has mixed and matched Isaac Asimov, Isaac Newton and Albert Einstein in his ode to the robot


karkibava.com

முணுமுணுத்துக் கொண்டிருக்கு இன்னொரு பாடல் “பூம் பூம் ரோபோடா..ஸூம் ஸூம் ரோபோடா”. நம்ம ரோபோ ரஜினி மக்கள் மனசுல இடம் பிடிக்கிறார். இந்தியன் தாத்தா டிரெஸ்ஸ எல்லோரும் போட்டுட்டு சுத்துவாங்களே!!அப்படி ஒரு சிச்சுவேஷன்ல வர்ற பாட்டென்று நினைக்கிறேன். பாடலை எழுதியவர் கார்க்கி. அட மதன் கார்க்கிங்க. “ஆட்டோ ஆட்டோக்காரா.. ஏ ஆட்டோமேட்டிக்காரா.. கூட்டம் கூட்டம் பாரு. உன் ஆட்டோகிராஃபுக்கா” என்றும் “பட்டித்தொட்டி எல்லாம் நீ பட்டுக்குட்டியோ” என்றும் வருவதைப் பார்த்தால் மேலே சொன்ன சிச்சுவேஷன் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. ஆனால் “திருமண திருநாள் தெரியும் முன்னே நீ எங்கள் பிள்ளையோ” என்ற வரியும் வருகிறது இது ஐஷ்வர்யா பாடுவது போல் தெரிகிறது. எது எப்படியோ இன்னொரு அடிக்ட் செய்ய வைக்கும் பாடல். யோகி பியின் ராப்பும் தூள் பரத்துகிறது. இதை தவிர சிட்டி ஷோ கேஸ் என்ற தீம் மியூசிக்கும், இரும்பிலே ஒரு இதயமென்ற பாடலும் இருக்கிறது. மற்ற பாடல்களோடு ஒப்பிடும்போது அவை என்னை அதிகம் கவரவில்லை


kaththavarayan.blogspot.com

“த‌வ‌மின்றி வ‌ர‌ங்க‌ள் த‌ருவ‌த‌னாலே மின்சார‌ க‌ண்ண‌ணோ?” என்ற வ‌ரியின் மூல‌ம் எந்திர‌னை க‌லியுக‌ க‌ண்ண‌னாக‌ உருவ‌க‌ப்ப‌டுத்தியிருக்கும் கார்க்கி க‌வ‌ன‌த்தை ஈர்த்தாலும் ஒட்டுமொத்த‌ பாட‌லின் ந‌டையில் த‌ந்தையை பின்ப‌ற்றுவ‌து அவ‌ர‌து வ‌ள‌ர்ச்சிக்கு ந‌ல்ல‌த‌ல்ல‌. கார்க்கி எழுதிய‌ இந்த‌ பாட‌லின் ந‌டையில் வைர‌முத்துவின் சாய‌ல் போன்ற‌ பிர‌மை ந‌ம‌க்கு ஏற்ப‌டுவ‌தை த‌விர்க்க‌ முடிய‌வில்லை “எச்சில் இல்லா எந்த‌ன் முத்த‌ம் ச‌ர்ச்சை இன்றிக் கொள்வாயா?”, ” உள‌விய‌ல் மொழிக‌ளில் இந்திர‌ன்” “பூஜ்ஜிய‌ம் ஒன்றோடு (1-0 லாஜிக் கேட்)” போன்ற‌ வ‌ரிக‌ள் ந‌ன்றாக‌ இருந்தும்.

“மின் மீன்க‌ள் விண்ணோடு” என்ற‌ வ‌ரியில் “விண் மீன்க‌ள்” என்று அல்ல‌வா வ‌ர‌வேண்டும் !

“நீ தூங்கும் நேர‌த்தில் நான் என்னை அணைப்பேன்” என்ற‌ வ‌ரியில் எந்திர‌ன் எப்ப‌டி த‌ன்னைத் தானே அணைத்துக்கொள்ளும்? உன்னை என்று அல்ல‌வா வ‌ர‌வேண்டும் !

அணை என்றால் Shutdown என்று ஒரு அர்த்த‌ம் உள்ள‌து, ஆனால் ச‌ர்ச்சைக்குரிய‌ அந்த‌ வ‌ரியை அடுத்து சில‌ வ‌ரிக‌ள் க‌ழித்து வ‌ரும் வ‌ரிக‌ளை கொஞ்ச‌ம் க‌வ‌னியுங்க‌ள் “shutdown செய்யாம‌ல் இர‌வினில் துடித்தேன்”.

இந்த‌ முர‌ண்பாடுக‌ளுக்கு கார‌ண‌ம் கார்க்கியின் அனுப‌வ‌மின்மையே....

மொத்த‌த்தில் கார்க்கி ந‌ல்ல‌ துவ‌க்க‌த்தை வீண‌டித்துள்ளார்.


alaikal.com & Thatstamil.com

‘இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதே…’ பாடலை கார்க்கி எழுதியுள்ளார். இதற்குத்தான் பெரிய அளவு எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், ‘பரவாயில்லை கேட்கலாம்….’ எனும் அளவுக்குத்தான் இந்தப் பாடல் உள்ளது. கடைசி பாட்டு ‘ரோ ரோ ரோபோடா…’. பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இந்தப் பாடல் இல்லை. வெறும் விஞ்ஞான வார்த்தைகளைப் போட்டு நிரப்பினால் மட்டும் போதாததல்லவா…


parisalkaaran.com

ஆரம்பமே கலக்கல். டெக்னிகல்+காதல் கலந்து வாலி இன்னும் இளமையானால் எப்படி எழுதியிருப்பாரோ அப்படி எழுதியிருக்கிறார் கார்க்கி. துள்ளலான பாடல்.

கவர்ந்த வரிகள்: ஏறக்குறைய எல்லாமே...


rampakkangal.blogspot.com

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை நிரூபித்துள்ளார் கார்க்கி அவர்கள்.

'இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ -முதல் முறை காதல் அரும்புதோ

பூஜ்யம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு- மின்மீன்கள் விண்ணோடு, மின்னல்கள் கண்ணோடு -கூகுல்கள் காணாத தேடல்கள் என்னோடு என்று ஆரம்பித்து

'எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றி கொள்வாயா

ரத்தம் இல்லா காதல் என்று ஒத்திப்போக சொல்வாயா

உயிரியல் மொழிகளில் எந்திரன் நானடி-உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி

என்று பிரமிக்க வைக்கிறார்.


sirippu.wordpress.com

எந்திரனின் ஒரே ஏமாற்றம் கார்க்கி ! பெரிதும் எதிர்பார்த்து பொசுக்கென்று போய்விட்ட தீபாவளிப் பட்டாசு போல வரிகள் ஒட்டுமொத்தமான ஏமாற்றத்தின் பக்கத்தில் ! வைரமுத்துவின் அடுத்த இடத்தை கம்பீரமாய் எட்டிப் பிடிக்க நா.முத்துக்குமார் போன்ற வலுவான போட்டியாளர்கள் வரிசையாய் இருக்கையில், கார்க்கி தனக்குக் கிடைத்த அசத்தல் வாய்ப்பை அசால்ட்டாய் விட்டிருக்கிறார் ! இரும்பிலே ஒரு இதயம் பாடல் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் ரசனை வரிகளைக் கொண்டிருக்கிறது !


idlyvadai.blogspot.com


பட்டி தொட்டி ரோபோ, சுட்டி சுட்டி ரோபோ என்று ரோபோ பாடல். அடுத்த வருடம் நர்சரி ரைம்ஸில் இந்த பாடல் சேர்த்தாலும் ஆச்சரியப்பட கூடாது. நிச்சயம் குழந்தைகள் பள்ளி விழாக்களில் ரோபோ வேஷம் போட்டு ஆட போகிறார்கள்


mannairvs.blogspot.com

வாய் உண்டு ஆனால் வயிறில்லை

பேச்சு உண்டு மூச்சில்லை

நாடி உண்டு இருதயம் இல்லை

பவர்தான் உண்டு திமிரே இல்லை

இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் கார்க்கி என்ற பாடலாசிரியர். இதுவரை என்ன எழுதியிருக்கிறார் என்று எனக்கு தெரியாது. வைரமுத்துவின் வாரிசு என்று தகவல். கள்ளிக்காட்டிர்க்கு பிறந்த ஒரு கவிதைக் காடு. நான்கே வார்த்தைகளில் ஒரு ரோபோவின் இலக்கணத்தை வருணித்திருக்கிறார்.

பாடல் எழுதிய கார்க்கி கொஞ்சம் கம்ப்யூட்டர்காரர் போல் தெரிகிறது. கீழ் காணும் வரிகளில் அது ஊர்ஜிதமாகிறது பாருங்கள்.

"மின்மீன்கள் விண்ணோடு

மின்னல்கள் கண்ணோடு

கூகிள்-கள் காணாத

தேடல்கள் என்னோடு"

அட்டகாசம். கார்க்கியின் அறிவியல் ஞானமும், தமிழும் கலப்பு திருமணம் செய்து கொள்ளும் இது போன்ற இடங்கள் இவரது பாடல்களில் ஏராளம். பாராட்டப்பட வேண்டிய கவிஞர்.


moonramkonam.blogspot.com

பாடல் வரிகளில் ஒரு ரோபோ காதலிப்பதின் வித்தியாசத்தை அழகாக புரிய வைக்கிறார்கள். இடையில் வரும் ராப் எங்கோ கேட்ட மாதிரியே இருப்பதை தவிர்த்திருக்கலாம். கார்க்கி தந்தையின் அறிவியல் வரி எழுதும் திறனை தொட முயன்றிருக்கிறார்.


writercsk.com

மதன் கார்க்கியை ஒரு பாடலாசிரியராய்க் கைதட்டி வரவேற்கத் தூண்டுகிற மாதிரியான‌ நிறைய 'அட!' போட வைக்கும் வ‌ரிகளைக் கொண்ட பாடல் (ஐந்து உதாரணங்கள்: "பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு கூகுல்கள் காணாத தேடல்கள் உன்னோடு", "என் இஞ்சின் நெஞ்சோடு உன் நெஞ்சை அணைப்பேன் நீ தூங்கும் நேரத்தில் நான் என்னை அணைப்பேன்", "மெமரியில் குமரியை தனிச்சிறை பிடித்தேன் ஷட்டௌனே செய்யாமல் இரவினில் துடித்தேன்", "எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொள்வாயா? ரத்தம் இல்லாக் காதல் என்று ஒத்திப் போகச் சொல்வாயா?", "உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி உளவியல் மொழிகளில் இந்திரன் தானடி"). இப்பாட‌லில் ரஹ்மான் யுவன் ஷங்கர் ராஜா போல் பாட முயற்சித்திருக்கிறாற் போல் தெரிகிறது (குறிப்பாய் "ஐரோபோ உன் காதில் ஐ லவ் யூ சொல்லட்டா" போன்ற வரிகளில்) +

"சிட்டி சிட்டி ரோபோ நீ சுட்டி சுட்டி ரோபோ பட்டி தொட்டி எல்லாம் நீ பட்டுக் குட்டியோ"). வரிகள் மட்டும் பார்த்துப் பார்த்துச் சேர்த்துக் குழைத்த‌ ஹைடெக் குப்பை ("ஐசக் அஸிமோவின் வேலையோ ரோபோ ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ ரோபோ". இதில் முதலில் வரும் அஸிமோவ் ரோபோவை வைத்து எழுதியிருக்கிறார் - புரிகிறது; கடைசியில் வரும் ஐன்ஸ்டீன் அளவுக்கு புத்திசாலித்தனத்துடன் ரோபோ இருக்கலாம் - புரிகிறது; இடையில் வரும் நியூட்டனின் லீலை - புரியவில்லை. ரோபோவுக்கும் நியூட்டனும் என்ன தொடர்பு?)


kadaikutti.blogspot.com

“இரும்பிலே இருதயம் முழைக்குதோ... “ செம.. அ.ஆ பட “மரங்கொத்தியே..” பாடல் பீட்ல இருந்தாலும் மதன் கார்க்கி ஸ்கோர் செய்யுறாரு...

”கூகுள்கள் காணாத

தேடல்கள் என்னோடு... “

வரிகள் ரசித்தேன்...

”என் இன்ஜின் நெஞ்ஞோடு

உன் நெஞ்ஞை அணைப்பேன்..

நீ தூங்கும் நேரத்தில்

நான் என்னை அணைப்பேன்... “

ஹா ஹா.. கண்டிப்பாக ஒரு ரோபட் பாடலாம் இப்படி...


avyukta.net

"கூகிள்கள் காணாத

தேடல்கள் என்னோடு.. " - எனும்போது கார்க்கி (புதுசோ?) புன்னகைக்க வைக்கிறார்..


WOW!!!

Thank you all for your comments, reviews and suggestions.

Expecting your feedback for my future projects too.