Friday, December 23, 2011

[lyric] அஸ்க் லஸ்கா
[lyric] எந்தன் கண் முன்னே


Gemini Film Circuit
நண்பன்
கண் முன்னே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
குரல் : ஆலாப் ராஜு
இயக்கம் : ஷங்கர்
___________________________

எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!

யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!

இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன்
எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்

கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா?[Lyric] காலமே காலமே!


Raindropss Media
World Disability Day
காலமே! காலமே!
இசை: தேவ் குரு
குரல்கள்: பிரியா ஹிமேஷ், பாலாஜி
இயக்கம்: அரவிந்த்
________________________________________

காலமே காலமே!
கால்களின்றி உன் போலே
நானும் ஓடுவேன்!
மேகமே மேகமே!
கைகளின்றி உன் போலே
வானம் தேடுவேன்!

தென்றல் வந்து பாடும் போது
ஆடும் பூவில் காது ஏது?
ஊர் மயங்க வாசம் வீசும்
பூமரத்தில் நாசி ஏது?

நாவின்றி பேசிடும்
வானவில் கண்டேன்!
விழியின்றி பார்த்திடும்
நெஞ்சினை கொண்டேன்!

தார்ச்சாலை தாண்டிச்செல்ல
கை நீட்டும் அன்பு போதும்!
நாற்காலி கேட்குமுன்னே 
தருவோரின் உள்ளம் போதும்!

இருள்கொண்ட எங்கள் ஊரில் 
விளக்கேற்றும் எண்ணம் போதும்!
எழுநூறு கோடி பேரில்
எமை காணும் கண்கள் போதும்!

கண்ணீரைத் துடைத்திடும்
விரல்களும் போதும்!
எமக்காக ஒலித்திடும்
குரல்களும் போதும்!


Wednesday, November 16, 2011

[Lyric] அனாமிகா அனாமிகா

மோகனா மூவீஸ்

மௌனகுரு

அனாமிகா அனாமிகா

இசை : தமன்

இயக்கம் : சாந்தகுமார்

குரல் : கார்த்திக், ஹரிணி

_________________________________


அனாமிகா ஹே அனாமிகா

அடிமனவெளிகளில் அனாமிகா

அனாமிகா ஹே அனாமிகா

அலையென அலைந்திடும் அனாமிகா


அனாமிகா ஹே அனாமிகா

அடைமழைக்குடை என அனாமிகா

அனாமிகா ஹே அனாமிகா

அறையினில் பிறையென அனாமிகா>என் இதயத் திசைமானி

>காட்டுகின்ற திசையில் நீ

>என்னவென்று அவதானி

>காதல்தானா?


>உன் விழியில் வாழ்வேனா

>உன் நிழலில் வீழ்வேனா

>கேள்விகேட்கும் நெஞ்சோடு

>காதல்தானா?


ஹே ஹே உன் அருகிலே

நொடிகளின் இடைவெளி பெருகிடக் கண்டேன்

ஹே ஹே உன் அருகிலே

புதுஒரு உறவினை அரும்பிடக் கண்டேன்

ஹே ஹே என் அருகிலே

உனைஉனை நீயே விரும்பிடக் கண்டேன்

ஹோ என் கனவிலே

ஓர் இருதயப்பெயர்ச்சியைக் கண்டேனே!


அனாமிகா ஹே அனாமிகா

அடிமன வெளிகளில் அனாமிகா

அனாமிகா ஹே அனாமிகா

அலையென அலைந்திடும் அனாமிகா


அனாமிகா ஹே அனாமிகா

அடைமழைக்குடை என அனாமிகா

அனாமிகா ஹே அனாமிகா

அறையினில் பிறையென அனாமிகா

_________________________________________


>யாரோடும் காணா ஒன்றை

>ஏனுன்னில் நானும் கண்டேன்?


ஹே உன் உடல்மொழி

காதல் மொழியுதே!


>ஊரோடு ஏனோ இன்று

>வண்ணங்கள் கூடக் கண்டேன்


ஹே உன் எதிரொளி

நெஞ்சில் பதியுதே!


>தினசரி கனவதன் உணவென

>உனைதரும் நினைவுகள் தேக்குகிறேன்! - உன்

>அரைகுறை உரைகளை கரையுமுன்

>உறைசிறை அறைகளில் பூட்டுகிறேன்!


ஹே ஹே உன் அருகிலே

நொடிகளின் இடைவெளி பெறுகிடக் கண்டேன்

ஹோ என் கனவிலே

ஓர் இருதயப்பெயர்ச்சியைக் கண்டேனே!


_______________________Tuesday, October 18, 2011

[lyric] பட்டாம்பூச்சிச் சிறகில்

NDFC Production Ad Film

கோவாப்டெக்ஸ் பட்டு

பட்டாம்பூச்சிச் சிறகில்

இசை : ரஹ்நந்தன்

இயக்கம் : மூர்த்தி

குரல் : GV பிரகாஷ்

_____________________________

உன் பட்டாம்பூச்சிச் சிறகில்

என் கண்கள் பறித்தாயோ?

என் பட்டுப் பூவே

எந்தன் காற்றில் வாசந்தெளித்தாயோ?


உரசிப் போகும் சத்தத்தில்

உன் தூய்மை சொன்னாயோ?

புவியில் இல்லா சுவைகள் எல்லாம்

உணர்விகள் அறியச் செய்தாயோ?


தொட்டுப் பார்க்கும் விரல்களில் எல்லாம்

மென்மின்சாரம் பாய்கிறதோ?

உன் போலே வண்ணம் அணிந்திடத்தானோ

வெண்ணிற நிலவது தேய்கிறதோ?


கோதையின் மேனியில்

கோலமாய்.... காலகாலமாய்...

கோ-ஆப்டெக்ஸ்!

Friday, July 22, 2011

[lyrics] முடிவில்லா மழையோடு

படம் : வந்தான் வென்றான்

இசை : தமன்

இயக்கம் : கண்ணன்


முடிவில்லா மழையோடு

விளையாடும் எங்கள் கூட்டம்

அடிவானின் நிறமெல்லாம்

விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்

விடிகாலை பனியோடு நம்

புன்னகையின் மூட்டம்

அடிநெஞ்சில் உற்சாகம்

கற்பூரம் போலே பற்றட்டும்


சீறிப் பாயும் வெள்ளம் என

உள்ளம் துள்ளி ஆடட்டும்!

காட்டுத் தீயின் பந்தாய் - என்

கால்கள் இங்கே ஓடட்டும்!


அடி வைத்தால் அதிரட்டும்

வான் மீன்கள் உதிரட்டும்

போராடும் மட்டும்

ஏதும் எட்டும்

மேகம் முட்டிக் கொட்டட்டும்!


-----

உன் பாதம் கொஞ்சம் தேயாமல்

உன் வாழ்க்கை என்றும் மாறாது!

கண் ஈரம் கொஞ்சம் காயாமல்

உன் காயம் ஒன்றும் ஆறாது!


தோல்விகள் ஆயிரம் எல்லாம்

தோரணம் கோர்த்திடு தோழா!

வெற்றியின் வாசலைச் சேர

காரணம் பார்த்திடு தோழா!


----

நம் பாதை செல்லும் நீளந்தான்

நம் புன்னகையின் நீளங்கள்

நாம் ஏறி வரும் ஆழந்தான்

நம் இன்பங்களின் ஆழங்கள்


சேற்றிலே நீ விழுந்தாலும்

தாமரை மாலைகள் மாட்டிடு

நேற்று நீ போர் இழந்தாலும்

நாளை உன் நாளெனக் காட்டிடு

[lyrics] ஏஞ்சோ

படம் : வந்தான் வென்றான்

இசை : தமன்

இயக்கம் : கண்ணன்


மின் நிலவிவள் - ஒரு

வெண் ஒளித்திரள்

கண்கள் சிமிட்டிடும் - அந்த

நியுயார்க் சிலையிவள் - Yo!


ஏஞ்சோ - ஒரு பனித்துளிப் பதுமையோ?

ஏஞ்சோ - ஒரு புதுவகைப் புதுமையோ?


இவள் தும்பியோ ஒரு தும்பையோ?

ஜீன் டாப்ஸிலே ஒரு பெப்ஸியோ?

கேட்வாக்கிடும் ஒரு சேட்டையோ?

வாய்ப்பூட்டில்லா பூ மூட்டையோ?


ஹே வீணை மேலே பூனை போலே
பூமி மேலே வந்தாள் - ஹோ...

ஹே மௌனம் இல்லா நாணம் இல்லா
ஊனம் கொண்டே வந்தாள்


ஒரு வேளை திருவாயை.
திறவாமல். இருந்தாலே...

இவள் அமைதிக்கு நோபல் தர
உலகமே முடிவெடுக்கும்


ஹே ஏஞ்சோ

நீ விண்மீனின் பிஞ்சோ

ஹே ஏஞ்சோ...

நீ கொஞ்சும் மென் பஞ்சோ


----

இவள் விழிக் கூரில்

தினந்தினம்

கிழிபடும் நூறு

இருதயம்

ஆடை மோதி ஊரில் பாதி

அவதியில் அலைகிறதோ?


ஹே

நீடில் இடை மாடல் போலே

ஈடில்லாமால் வந்தாள் - ஹோ

ஐபாடில் இல்லா பாடல் ஒன்றை

காதில் பாட வந்தாள்!


நெப்ட்யூனே... என்றாலும்.

பண்டோரா சென்றாலும்

இவள் அழகுக்கு நிகர் என

அகிலத்தில் உயிர் இல்லையே!


-----

ஹீப்ரூ இலத்தீனக் கவிதைகள்

eyebrow மொழியோடு தோற்றிடும்


Ballet Flamenco நடனங்கள்

பாவை விழியோடு தோற்றிடும்


waltz 'n jazz எல்லாம்

இவள் பேச்சில் தோற்றிடும்


செங்காந்தள் ஆம்பல்

ஊதா ரோஜா நொச்சிப் பூவும்

இவள் மூச்சில் தோற்றிடும்


ஹோ ஏஞ்சல் ரேஞ்சில் ஏஞ்சோ.!

[lyrics] திறந்தேன் திறந்தேன்

படம் : வந்தான் வென்றான்

இசை : தமன்

இயக்கம் : கண்ணன்


திறந்தேன் திறந்தேன் நீ முட்டித் திறந்தேன்

என்னுள்ளே நீ வந்து தீ மூட்டத் திறந்தேன்

உறைந்தே உறங்கும் என் உள்ளச் சில்லெல்லாம்

ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்கத் திறந்தேன்


தொலை தொலை என எனை

நானே கேட்டுக்கொண்டேனே

என் மமதையினை!


நுழை நுழை உனை என

நானே மாற்றிக்கொண்டேனே

என் சரிதையினை!


>துளையேதும் இல்லாத தேன் கூடோ

>நுழைவேதும் இல்லாத ஊன் காடோ

>விளைவேதும் இல்லாத மாநாடோ

>உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ?


-----

முகத்திரை திருடினாய்

திரைக் கதைப்படி

அகத்தினை வருடினாய்

அதைக் கடைப்பிடி


>பெண்ணே உன்னைத் துறவி என்றுதான்

>இந்நாள் வரை குழம்பிப் போயினேன்


துறவறம்

துறக்கிறேன்


>துளையேதும் இல்லாத தேன் கூடோ

>நுழைவேதும் இல்லாத ஊன் காடோ

>விளைவேதும் இல்லாத மாநாடோ

>உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ?


----

உரிமைகள் வழங்கினேன்

உடை வரை தொடு

மருங்குகள் மீறியே

மடை உடைத்திடு


>ஓராயிரம் இரவில் சேர்த்ததை

>ஓரீர் நொடி இரவல் கேட்கிறாய்!


பொறுமையின்

சிகரமே!


>துளையேதும் இல்லாத தேன் கூடோ

>நுழைவேதும் இல்லாத ஊன் காடோ

>விளைவேதும் இல்லாத மாநாடோ

>உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய் தானோ?


Thursday, July 21, 2011

[lyrics] Continua

Song : Continua (Portuguese & English Translation)

Film : Nootrenbadhu

Music : Sharreth

Director : Jayendra


Continua

Continua, a vida.

Continua

O tempo está do meu lado.

Vida! Vida!

É muito mística!

Minha Vida! Vida!

É muito mágica!


Nunca esperes nada

Vai com a corrente

Isso é o que esta em causa.

Vida!


Momento, o presente momento é tão bonito

Momento, o presente momento é tão bonito

hoje é feito para nos

ontem e amanhã

estão lá

só para os ignorarmos


Estrelas cintilantes florescem subitamente

Estrelas cintilantes desaparecem subitamente

O que importa? porque?

A luz que lança

Para nós

para nosso deleite


---- (English Translation)


Continues...

Continues, the life.

Continues...

The time is by my side

Life! Life!

It is very mystical

My Life! Life!

It is very magical


Never expect anything

Just go with the flow

That is what this is all about. Life!


The present moment is so beautiful

The present moment is so beautiful

Today is made just for us.

Yesterday and tomorrow

Are there,

Just for us to ignore!


Blinking Stars bloom suddenly

Blinking Stars disappear suddenly

What really matters? Why?

The light it throws

for us

To our delight.

----

Friday, April 15, 2011

[lyrics] துறுதுறு கண்ணில்

படம் : 180

பாடல் : துறுதுறு கண்ணில்

இசை : ஷரத்

இயக்கம் : ஜெயேந்திரா


துறுதுறு கண்ணில்

துரு நீங்கும் போது

சிறுசிறு கனவுகள்

சிறகு சூடும்


நாளை போடும்

சேதித் தாள் - எந்தன்

பேரைக் காட்டுமே


எல்லைத் தாண்டி

நோபல் பரிசு என்

கைக்கெட்டுமே


நோயில்லாத

பூமிப் பந்தொன்றை

நானே கட்டுவேன்


தாயின் கண்ணில்

இன்பம் உண்டாக்க

விண் முட்டுவேன்


துறுதுறு கண்ணில்

துரு நீங்கும் போது

சிறுசிறு கனவுகள்

சிறகு சூடும்


புதிய புதிய உலகம் வேண்டாமே

நேற்றுலகம் நான் காண்பேன்

தூசில்லா பூங்காற்றிலே


மழைகள் விழ

விசை செய்வேன்

விழிகள் அழ

தடை போடுவேன்


கனவை

விதை எனப் புதைக்கிறேன்


துறுதுறு கண்ணில்

துரு நீங்கும் போது

சிறுசிறு கனவுகள்

சிறகு சூடும்


திரையால் மூடும்போதும் - விண்ணில்

தீ மறைவதில்லை

பசியால் வாடும் போதும் - கண்ணில்

தீ குறைவதில்லை


பல நாள் இருளும்

ஒரு நாள் சுருளும் எனவே!

மருளும் மனதில்

ஒளியாய் திரளும் கனவே!


கனவெல்லாம் கூடுமே

கைகள் கூடும் வேளையில்

இருளெல்லாம் தீயுமே

தீயில்...

-----

[lyrics] நீ கோரினால்

படம் : 180

பாடல் : நீ கோரினால்

இசை : ஷரத்

இயக்கம் : ஜெயேந்திரா


நீ கோரினால்

வானம் மாறாதா! - தினம்

தீராமலே

மேகம் தூறாதா!

-----

தீயே இன்றியே - நீ

என்னை வாட்டினாய்

உன் ஜன்னலை அடைத்தடைத்து

பெண்ணே ஓடாதே!


ஓடும் ஓடும்

அசையாதோடும் அழகியே!

------

கண்டும் தீண்டிடா- நான்

போதிச் சாதியா

என் மீதிப் பாதி பிம்பப் பூவே

பட்டுப் போகாதே.


போதை ஊறும்

இதழின் ஓரம் பருக வா.

----

[lyrics] சந்திக்காத கண்களில்

படம் : 180

பாடல் : சந்திக்காத கண்களில்

இசை : ஷரத்

இயக்கம் : ஜெயேந்திரா


சந்திக்காத கண்களில்

இன்பங்கள்

செய்யப்போகிறேன்

சிந்திக்காது சிந்திடும்

கொண்டலாய்

பெய்யப்போகிறேன்


>அன்பின் ஆலை ஆனாய்

>ஏங்கும் ஏழை நானாய்

>தண்ணீரைத் தேடும் மீனாய்

------

>ஊகம் செய்தேனில்லை

>மோகம் உன் மீதானேன்


கதைகள் கதைகள் கதைத்து

விட்டுப் போகாமல்?

விதைகள் விதைகள் விதைத்து

விட்டுப் போவோமே


திசையறியா பறவைகளாய்

நீ நான் நீள் வான்

வெளியிலே... பறக்கிறோம்

------

>போகும் நம் தூரங்கள்

>நீளம் தான் கூடாதா?


இணையும் முனையம் இதயம்

என்று ஆனாலே

பயனம் முடியும் பயமும்

விட்டுப் போகாதோ


முடிவறியா

அடிவானமாய்

ஏன் ஏன் நீ நான்

தினந்தினம்

தொடர்கிறோம்?

------

[lyrics] ஏஜே

படம் : 180

பாடல் : ஏஜே

இசை : ஷரத்

இயக்கம் : ஜெயேந்திரா


ஏஜே

ஏஜே

மனம் மறைப்பதேன்? ஏஜே


பார்வை கூறும் வார்த்தை நூறு

நாவில் ஏறும் வார்த்தை வேறு

நாணம் தீரும் - நீ இவளை பாரு

மனதை கூறு

மனம் மறைப்பதேன்? ஏஜே

----

நாடியைத் தேடி உனது

கரம் தீண்டினேன்

நாழிகை ஓடக் கூடா

வரம் வேண்டினேன்


மனதினை மெல்வேனோ?

சில யுகம் கொள்வேனோ?

சொல்வேனோ?

----

மேல்விழும் தூறல் எனது

ஆசை சொன்னதா?

கால்வரை ஓடி எனது

காதல் சொன்னதா?


அருகிலே வந்தாடும்

இருதயம் நின்றோடும்

திண்டாடும்

-----

[lyrics] உவெசுலா ஊது

படம் : 180

பாடல் : உவெசுலா ஊது

இசை : ஷரத்

இயக்கம் : ஜெயேந்திரா


உவெசெலா ஊது

rules கிடையாது

கிழியட்டும் காது Yo!


பொஹரபோ பீட்டு

கிளப்புது ஹீட்டு

அதிருது ஸ்ட்ரீட்டு Yo!

-----

நிகழ் நிகழ் காலம்

இதோ இதோ போச்சு!

புகழ் பணம் மூச்சு

தினம் செலவாச்சு!


மேகமாய் பறக்க - நீ

ஊது உவெசெலா

வானத்தை திறக்க - நீ

ஊது உவெசெலா...

-----

தினந்தினந் தூங்க

இமை படச்சானா ?

உனக்குள்ளே பாக்க

கதவடச்சானா?


சாமியும் விழிக்கும் நீ

ஊது உவெசெலா!

பூமியே செழிக்கும் நீ

ஊது உவெசெலா!

-----