Saturday, July 31, 2010

[lyric] இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ

முதல்முறை காதல் அழைக்குதோ


பூஜ்ஜியம் ஒன்றோடு

பூவாசம் இன்றோடு

மின்மீன்கள் விண்னோடு

மின்னல்கள் கண்ணோடு


கூகுல்கள் காணாத

தேடல்கள் என்னோடு

காலங்கள் காணா காதல்

பெண் பூவே உன்னோடு


iRobo உன் காதில்

ஐ லவ் யூ சொல்லட்டா?


>I am a super girl

>உன் காதல் rapper girl


என்னுள்ளே எண்ணெல்லாம்

நீதானே நீதானே


உன் நீலக் கண்ணோரம்

மின்சாரம் பறிப்பேன்

என் நீலப் பல்லாலே

உன்னோடு சிரிப்பேன்


என் engine நெஞ்சோடு

உன் நெஞ்சை அணைப்பேன்

நீ தூங்கும் நேரத்தில்

நான் என்னை அணைப்பேன்


எந்நாளும் எப்போதும்

உன் கையில் பொம்மையாவேன்


>கட்டிக்கொள்ளும் போதும்

>தொட்டுப்பேசும் போதும்

>ஷாக்கடிக்கக் கூடும்


>காதல் செய்யும் நேரம்

>மோட்டார் வேகம் கூடும்

>இரவில்... நடுவில்...

>பேட்டரிதான் தீரும்


மெமரியில் குமரியை

தனிச் சிறை பிடித்தேன்

shutdown-ஏ செய்யாமல்

இரவினில் துடித்தேன்


sensor எல்லாம் தேயத்தேய

நாளும் உன்னை படித்தேன்

உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன்


எச்சில் இல்லா எந்தன் முத்தம்

சர்ச்சை இன்றிக் கொள்வாயா?

ரத்தம் இல்லாக் காதல் என்று

ஒத்திப் போகச் சொல்வாயா?


உயிரியல் மொழிகளில்

எந்திரன் தானடி

உளவியல் மொழிகளில்

இந்திரன் நானடி


சாதல் இல்லா சாபம் வாங்கி

மண்மேலே வந்தேனே

தேய்மானமே இல்லா

காதல் கொண்டு வந்தேனே


>முட்டாதே ஓரம்போ - நீ

>காலைச் சுத்தும் பாம்போ

>காதல் செய்யும் ரோபோ

>தேவையில்லை போ போ

27 comments:

Shankar Balachandran said...

Good one... fav lyrics...google gal kaanatha thedalgal ennodu..:)...keep going madhan...thalaivar pattu pattaya kelappattum..:)

ஆயில்யன் said...

//உயிரியல் மொழிகளில்

எந்திரன் தானடி

உளவியல் மொழிகளில்

இந்திரன் நானடி//

:))

எந்திரனுக்கே உரிய பாடல் வரிகள் :)

வாழ்த்துக்கள் பாஸ்!

Sangeetha said...

பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு

:)lovely.. :)All the best.

pagala'k' said...

I can confidently say that this is probably the first song written for a geek-in-love. Well done!

சங்கீதன் said...

/ெமரியில் குமரியை // Misspelled?

தனிச் சிறை பிடித்தேன்

shutdown-ஏ செய்யாமல்

இரவினில் துடித்தேன் /

Attractive.. :)

skii said...

Hi Madhan Karky, congratulations on your Endhiran project... Shankar has found you a replacement of Sujatha.. :-) wish you all success in all your projects and fill the void of Sujatha... - Baskar

C.M.Lokesh said...

Excellent lines. Especially these lines are great!
எச்சில் இல்லா எந்தன் முத்தம்
சர்ச்சை இன்றிக் கொள்வாயா?
ரத்தம் இல்லாக் காதல் என்று
ஒத்திப் போகச் சொல்வாயா?
உயிரியல் மொழிகளில்
எந்திரன் தானடி
உளவியல் மொழிகளில்
இந்திரன் நானடி
This is how a lyricist should write when Vairamuthu sir is working in the same film. Otherwise people won't recognize the lyrics. Great work. Expecting more from you in future. All the best!!!

விஜய் said...

வரிகள் சந்தத்தோடு இயைகிறது

சிங்கத்திற்கு பிறந்தது சிறு நரியாகுமா ?

மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

விஜய்

Naveen said...

Excellent Lyrics sir. Yearning to see the visuals of this song after hearing .. :)

GokulSelvam said...

Great one :)Semma song ... Rehman's voice + Your Lyrics+Rocking Music = MAGICAL :) Going to be Chart-buster NO DOUBT :)

ஆனந்த்குமார் said...

Lyrics are good. But i have one doubt.
உளவியல் means pschycology, rite? what it is going to do with இந்திரன். It should be களவியல். am it rite?

சுழியம் said...

//'என் நீலப் பல்லாலே

உன்னோடு சிரிப்பேன்'//கலக்கல் :-)

vinothkumar said...

nice sir.. best lyrics for மெமரியில் குமரியை

தனிச் சிறை பிடித்தேன்

shutdown-ஏ செய்யாமல்

இரவினில் துடித்தேன்

உயிரியல் மொழிகளில்

எந்திரன் தானடி

உளவியல் மொழிகளில்

இந்திரன் நானடி... song all lines

done....

VSP said...

Nice lyrics in A.R.Rahman voice... Best wishes to Junior Arima.... Keep continue good work with your unique style....

E.Arunmozhidevan said...

Excellent Work . . . Great Opening நீங்கள் முழு நேர பாடலாசிரியராக தொடர வேண்டும் என்பதே என் ஆசை

IV said...

wow... lyrics for the facebook generation!!! not just slang...but very poetic...well done!

D.K.LAKSHMI NARAYAN said...

ur lyrics in enthiran is awesome keep rocking Dr.madhan

Venkat said...

Hi Karky,
Were the lyrics generated via ur lyric engineering tool?

regards,
Venkat

Venkat said...

Hi Karky,

Is the concept of turing test being handled in the movie? - about whether the robot is capable of emotions/tell a lie?

regards,
Venkat

Intelligent Design said...

Hi Madhanji.. All the best for bright career. However heights u achieve in life, dont forget me. I am Jaganath from Karur. Ur fan. Ur combination with my most fav ARR will rock for sure. En neela pallaale (Bluetooth)unnodu siripen. Fine lines - Scientific Tamil

Power Play said...

உக்காந்து யோசிக்கிறிங்களோ....
அருமையான பாடல் வரிகள்..
பாடலை கேட்கும்போதே படக்காட்சிகள் கண் முன் விரிகின்றது...
வாழ்த்துக்கள் நண்பா..
புலிக்கு பிறந்தது பூனை குட்டியாகுமா ?? பலே பலே...
இப்படிக்கு
ரிசாத்
http://www.facebook.com/rizadrkm

karths said...

"கூகுல்கள் காணாத

தேடல்கள் என்னோடு"

Awesome sir..gud luck..

Manjit Ramadhas said...

Madhan..The lyrics are really nice..I wish u all the very best..

abi said...

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ

முதல்முறை காதல் அழைக்குதோnice lines sir..... by anna university 3rd year IT and CSE 'g' batch students

Es_Chris said...

Nice lyrics.. sure must be a proud moment to write for thalaivar rajinikanth :)

Es_Chris said...

Saw your interview just now on indiaglitz. The first time i am seeing you speak. It was a nice interview, and nice to hear your experiences, especially the other 3 pallavi's for the irumbile song.

Best wishes to you karky!

Krishnan said...

Excellent work, a new dimension in tamil lyrics!!!