Monday, February 22, 2010

[song] துருக்கியின் தெருக்களில்

நீ துருக்கியின் தெருக்களில்

இருந்திருந்தால்... - நான்

‘செனி செவியோரம்’ கூவிடுவேன்


நீ ரைன் நதிக் கரைகளில்

நடக்கையிலே... - நான்

‘இச் லிபெ டிச்’ என உச்சரிப்பேன்


நீ சின் லின் மலைகளில்

அலைகையிலே... - ‘வோ

ஐ நீ’ என்றுனை அணைத்திடுவேன்


நீ ஃப்ரென்சு முத்தம்

கொடுக்கையிலே... - நான்
‘ஜே டேய்ம்’ ‘ஜே டேய்ம்’ ஜபித்திடுவேன்

_______________


பாஸ்னிய பாஷை

வசமிருந்தால்... - நான்

‘வாலிம் தே’ என வாய் மொழிவேன்


லங் காவித் தீவில்

உன் காதில் - ‘அகு

சிண்டா படாமு’ சிந்திடுவேன்


மேட்ரிட் நகரில்

தேவதையே - நான்

‘தே அமோ’ என்றே பாடிடுவேன்


சௌதியின் பாலை

சுடு மணலில் - நான்

‘பஹெபிக்’ என்றுனை சுமந்திடுவேன்

_______________


வார்ஸா வீதிப்

பனிகளிலே... - நான்

‘கொச்சம் லை’ என கொஞ்சிடுவேன்


தாய்லாந்த் துரியன்

காடுகளில் - நான்

‘பொம்ரக் குன்’ என பொங்கிடுவேன்


கிளிநொச்சியில் நீ

எழும்பையிலே - உனை

‘காதலிப்பதாய்’ கதைத்திடுவேன் - நீ


தாய்த் தமிழ் நாட்டில்

பிறந்ததனால் -

‘ஐ லவ் யூ’ என்கிறேன்....




9 comments:

ISR Selvakumar said...

அட! பல மொழி கற்றுக்கொள்ள புது வழி!
வாள மீனுக்கு என்ற பாடலில் இருந்த ஒரு கதை பாடலின் கடைசி வரி வரை கேட்க வைத்தது.

அதே போல துருக்கியில் கவனிக்க வைக்கிற வரிகள், தாய்த் தமிழ்நாடு வரை இழுத்து வருகிறது.

ஐ லவ் யுவை தமிழாக்கிய உங்கள் குறும்பு பேசப்படும்.

C.M.Lokesh said...

சௌதியின் பாலை சுடு மணலிலும் உன்னை சுமந்திடுவேன் என்பது வாழ்க்கையின் எந்த கட்டத்திததுலும் உன்னை பிரியமாட்டேன் என்பது போல அழுத்தமாய் இருக்கிறது. அழகான வரிகள். வாழ்த்துகள்!
C.M.Lokesh

E.Arunmozhidevan said...

நல்ல வரிகள்.வாழ்த்துக்கள் அண்ணா.இந்த பாடல் எந்த படத்தில் இடம்பெற போகிறது?

Madhan Karky said...

நன்றி @செல்வகுமார், @லோகேஷ், & அருண்மொழிதேவன். இது என் சொந்த ஆசைக்கு எழுதிய பாடல். எந்த சினிமாவில் இடம் பெறும் என தெரியவில்லை :-)

sivaG said...

please read it... http://eppoodi.blogspot.com/2009/11/blog-post_25.html

நேசமித்ரன் said...

அந்த கடைசி வரி ரொம்ப நல்ல இருக்குங்க

காதலை சொல்லும்போதும் ஒரு வலியை போறபோக்குல சொல்லிட்டு போற மாதிரி

Siddaarth said...

just awesome! ;)

என்ன செய்வது? நம் சமூகம் ஆங்கிலத்திற்குத் தரும் முக்கியத்துவத்தைத் தமிழுக்குக் தரவில்லையே! நம்மையும் அப்படித் தான் வளர்த்துள்ளது .. :(

விஜய் said...

அதையும் சுருக்கி 143 ஆக்கிட்டாங்க

வாழ்த்துக்கள் கார்க்கி

விஜய்

க்ருபா said...

ஏதோவொரு படத்துக்கு எழுதியது என்று நினைத்தேன்.

வெங்கடேச ஸ்தோத்ர ட்யூனுடன் ஒத்துப்போகும் என்று தோன்றுகிறது, "கமலாகுச்ச ச்சூச்சுக்க குங்குமதோ..." :-) எதேச்சையாக அமைந்ததுதான் என்று நினைக்கிறேன். ;-)

சு. க்ருபா ஷங்கர்