முகப்பில் உள்ள கருப்பு,
உரியோனுக்காகாதாம்.
விழிவலிக்கும் மஞ்சள் ஒன்றைத் தேர்வுசெய்தார்.
உள் பக்கத்து சுவரோவியங்கள்,
செல்வம் அழிக்குமாம்.
திருஷ்டி ஓவியங்கள் ஆங்காங்கே சிருஷ்டித்தார்.
தென்கிழக்கு மூலையில்
அஞ்சல் பெட்டி,
அழிவின் ஆரம்பமாம்.
தென்மேற்காய் நகர்த்தினார்.
தளத்தில் ஓடும் கோடுகள்,
தடைகள் கொண்டு சேர்க்குமாம்
செங்குத்தாய் கோடுகளிட்டுக் கட்டம் கட்டினார்.
இப்போதெல்லாம்...
என் இணைய தளத்திற்கு
தவறியும் யாரும் வருவதில்லை.
ஹவாயில் சூரியக்குளியல் எடுத்துக்கொண்டிருக்கிறார்
என் வாஸ்து ஜோசியர்.
ட்விட்டர் சொல்கிறது.
7 comments:
இப்போதெல்லாம்...
என் இணைய தளத்திற்கு
தவறியும் யாரும் வருவதில்லை.
How does this match with the rest of the poem?
That line talks about the entire poem.
Kind of not direct though.
ஹவாயில் செவ்வாய் தோஷம் நீக்க சென்றிருப்பார் அவரை போய் குறை கூறுகிறீர்களே.....
ட்வீட்டில் கால் டாக்ஸி கூப்பிடும் அளவு வந்தாச்சு.....
இத பண்ண மாட்டோமா :)
Hey dude ..Not sure if you remember me .. as Srikumar's room mate ( ramki ) ..
Heard you are there in Anna Univ ..Saw some of ur postings . nice ones dude ..
இணையத்தைதான் போனால் போகிறது என்று விட்டு வைத்திருக்கிறார்கள். நீயே யோசனை கொடுப்பாய் போல இருக்கிறதே.
இதெல்லாம் என்ன - ரூம் போட்டு யோசிப்பீங்களா :-)
ம்ம்ம்.. கை கொடுங்கள் கவிஞரே... ரசித்தேன்..
ம்ம்ம்.. கை கொடுங்கள் கவிஞரே... ரசித்தேன்..
Post a Comment