Wednesday, November 07, 2012

[lyric] விட்டு விட்டுத் தூவும்


Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
விட்டு விட்டு
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : ராகுல் நம்பியார், பார்கவி 
_________________________________________



விட்டு விட்டுத் தூவும்
வெட்கங்கெட்ட வானம்
கிட்டத் தட்ட என் நெஞ்சமோ?

முட்ட வந்த பூவின்
முட்கள் குத்தும் என்றே
வட்டமிட்ட வண்டஞ்சுமோ?


சொல்லாமல் மோதும் 
சில்லென்ற காற்றைப் போல நீயும் வந்தாய்
நில் என்ற போதும்
நில்லாமல் ஆடைக்குள்ளே நீ புகுந்தாய்

கல்லொன்று வீசி 
உள்ளத்தின் ஆழம் என்ன தேடுகின்றாய் 
தெள்ளோடை என்னை
உள்ளங்கையோடு அள்ளி ஓடுகின்றாய்


♂  
மொத்த மொத்த நெஞ்சை 
சத்தமிட்டுச் சொன்னால்
செத்து கித்துப் போவேனடி 

குத்தும் என்று இல்லை
தித்திக்கின்ற தேனில் 
புத்தி கெட்டுப் போவேனடி


நில்லாமல் பேசும் 
நீரோடை போலே என்னுள் பாய்கின்றாய்
புல்லோடு வீழும்
பூவாகி எந்தன் தோளில் சாய்கின்றாய்


பொல்லாத போதை 
என்றாகி என்னுள் ஏறி ஆடுகின்றாய்
செல்லாத பாதை
ஒன்றோடு என்னைக் கூட்டி ஓடுகின்றாய்
________________________________________




No comments: