Wednesday, November 07, 2012

[lyric] எனை எனை தீண்டும்



Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
எனை எனை தீ ண்டும் 
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : ஹரிசரண், மஹதி 
________________________________________


எனை எனை தீண்டும் 
தனிமையும் நீயா?
அருகிலே கேட்கும் 
அமைதியும் நீயா?

விழிகளை நான் மூட
கனவிலே நீயா?
திறந்ததும் நீ இல்லா
வெறுமையும் நீயா?

ஏன் எனை என் மனம் கேட்காதது ஏன்?
தருக்கங்களை பார்க்காதது ஏன்?
உருக்கும் ஒரு காதல் உணர்ந்தேன்!

#


அருகினில் குதிக்கிற அருவியிலே - தலை
குளித்ததும் உலர்த்திடும் சிறகினிலே 
சிலிர்த்திடும் சருகுகள் மொழியினில் கேட்பவன் நீ

திரிமுனை எரிந்திடும் அழகினிலே - அதில் 
முதல் முறை நெகிழ்ந்திடும் மெழுகினிலே
விழுந்திடும் இளகிய அழுகையில் காண்பவன் நீ


என் மார்பில் மோதும் - ஒரு
மென் மேகம் ஆனாய்
கண் மூடி நின்றேன் - நீ 
எங்கோடிப் போனாய்?


ஏன் எனை என் மனம் கேட்காதது ஏன்?
தருக்கங்களை பார்க்காதது ஏன்?
உருக்கும் ஒரு காதல் உணர்ந்தேன்!

#


ஓடையின் தெள்ளிய நீர்த்துளி நீ - ஒரு 
பூவினின்றள்ளிய தேன் துளி நீ
நாவினில் தமிழென நாளும் 
இனிப்பவன் நீ

இமைகளில் மியிலிறகானவன் நீ - என்
இதழினில் விழுகின்ற பனித்துளி நீ
இதயத்தை வருடிடும் உணர்வுகள் 
யாவிலும் நீ


என் தேகம் பாயும் - ஒரு 
உற்சாகம் நீயா?
சந்தேகம் இன்றி - என்
கண்ணீரும் நீயா?


ஏன் எனை என் மனம் கேட்காதது ஏன்?
தருக்கங்களை பார்க்காதது ஏன்?
உருக்கும் ஒரு காதல் உணர்ந்தேன்!




_________________________________________


No comments: