Thursday, June 07, 2012

[lyric] நீ இன்றி


AG Creations
பொன் மாலைப் பொழுது
பாடல் : நீ இன்றி [அந்தாதி]
இசை : சத்யா
இயக்கம் : துரை
குரல் : சத்யா
_______________________

நீ இன்றிக் கிடக்கும் இருக்கை அருகே
நெஞ்சம் ஏனோ தவழுது?

தவளைக் கிணறாய் சுருங்கும் உலகம்
கொஞ்சம் மெதுவாய் சுழலுது

சுழலின் உள்ளே உறங்கும் மீனாய்
வகுப்பில் நானும் இருக்கிறேன்

இறுக்கிப் பிடிக்கும் உனது நினைவில்
உறக்கம் கலைந்தேன். நீ எங்கே?

எங்கே எங்கே எங்கே? 
ஓஹொ... ஓ...

ஓர் ஆண்டிலே நேராதது
விலகித் தவிக்கையில் நிகழ்வது ஏன்?

ஏனோ உனைக் காண்பேனென
இதயம் துடிக்கையில் உணருகிறேன்

உனது சுவடுகள் தொடருகிறேன்
தொடங்கும் இடத்தினில் சேருகிறேனே
சேரும் வரை கண்ணில் தூக்கம் தோன்றாது
தோன்றும் வலி நீ வரும் வரையினில் நீங்காது

_______________________


4 comments:

Unknown said...

why bold for certain words? any spl reason?

http://naadiastrologystudycircle.blogspot.in/ said...

Madhan Karky,
Is this something similar to Naadi Palm leaf astrological lyrics?
Does it have some specific name other than Andhadhi? If so what is it?
Wish to know - has anyone constructed any verses in that fashion in recent times?

கவிஞர் அஸ்மின் said...

விழிகள் இரண்டும் இறக்கைகட்டி
விடியும் வரைக்கும் பறந்தது

பறவை மனசு நினைவை சுமந்து
பள்ளிக்கூடம் அலைந்தது

அலையாய் எழுந்து நுரையாய் கலைந்த
அவளின் தெருவில் நடந்தது

நடந்ததெல்லாம் நாடகம்போலே
மீண்டும் என்னை கடந்தது

கடந்த கால வாழ்வின் நிழலோ
கவலைபோன்றே படர்ந்தது

படபடவென்று துடித்த இதயம்
பாவம் மீண்டும் இறந்தது

இறந்தபோதும் மீண்டும் உயிர்த்து
இயேசுவைப்போல் எழுந்தது..

எழுவாய் இல்லா பயனிலைபோலே
ஏங்கும் வகுப்பில் அழுதது..

அழுக்கைப் போலே எந்தன் அன்பை
அவளும் எறிந்ததை நினைந்தது

நினைந்து நினைந்து குலைந்து பின்னர்
நிமிர்ந்து நேராய் நடந்தது...

நடந்ததெல்லாம் நன்மையானதால்
நான்கு திசையும் விழித்தது...!!

sathzkmr said...

Sir, Romba nalla lyrics.
I enjoyed the lyrics with / without music. Keep rocking sir.