Thursday, June 07, 2012

[lyric] வாற்கோதுமைக் கள்


AG Creations
பொன் மாலைப் பொழுது
பாடல் : வாற்கோதுமைக் கள் 
இசை : சத்யா
இயக்கம் : துரை

__________________

வாற்கோதுமைக் கள்ளோடு
வா தோழனே என்னோடு
ஊர்விட்டோடி காற்றை சுவாசிக்கலாம்

நாற்காலிகள் மேசைகள் 
நாள்தோறுமே தேய்த்தோமே
மேற்கூரையாய் வானம் நேசிக்கலாம்

கோப்புகளோடு கொட்டிய குப்பை
கோப்பைகள் முட்டி மறந்திடுவோம்!
பகலிரவைந்தும் நிகழ்த்திய தப்பை
ஓரிரு நாட்கள் துறந்திடுவோம்!

தோள்கள் உரசிப் பேசிக் கிடக்க
வாரக் கடைசி வந்ததடா!
செல்லிடப்பேசி மூடி அணைக்க
வாரக் கடைசி வந்ததடா!

வாற்கோதுமைக் கள்
சோர்வோயவே கொள்
_____________________

விரிவுரை எல்லாம் வரிவரியாக
எழுதி விரலும் தேய்ந்ததே
அறிவுரை கேட்டு சரிசரிசொல்லி
வறண்டு குரலும் காய்ந்ததே

தேயும் நிலவென 
புன்னகையும் சுருங்கி
யானை மிதிபடும்
அப்பளமாய் நொறுங்கி

ஞானம் பிறக்க ஞாலம் சிறக்க
வாரக் கடைசி வந்ததடா
மேற்கில் பறக்க ரெக்கை விரிக்க
வாரக் கடைசி வந்ததடா
_______________________

சங்கை ஊதித்  திங்கள் வந்தது
ஜவ்வாய் மாறிச் செவ்வாய் வந்தது
பூதம் போலொரு புதனும் வந்திடும் செல்லும்
வியாதித் தீயென வியாழன் வந்ததும் கொல்லும்
கவலைக்கிடமாய் நிலமை நிலமை 
தொடரும் தொடரும் தொடரும் தொடருமே

வெள்ளிக்கிழமை வந்தால் ஏனோ
உள்ளம் உச்சம் துள்ளுதோ?
யார் கையிலே யார் பையிலே 
இன்னும் மிச்சம் உள்ளதோ… 
... வாற்கோதுமைக் கள்ளோடு
வா தோழனே என்னோடு
ஊர்விட்டோடி காற்றை சுவாசிக்கலாம்
_________________________

புத்தகம் எல்லாம்
மூளை திணித்தே
மந்தையில் ஆடாகினோம்

ஆந்தைகள் போலே
கண்கள் விழித்தே
மண்டையில் சூடாகினோம்

நுரையீரல் எல்லாம்
வகுப்பறை வாசம்
அதை நீக்கத் தானே வழி தேடினோம்

நுனிநாக்கும் தானாய்
ஆங்கிலம் பேசும்
அதைப் போக்கத் தானே தமிழ் பாடினோம்

நிலவோடு கரைகள் குறையில்லை என்றே
அளவோடு ஏதும் பிழையில்லை என்றே... 
... வாற்கோதுமைக் கள்ளோடு
வா தோழனே என்னோடு
ஊர்விட்டோடி காற்றை சுவாசிக்கலாம்
___________________________

3 comments:

Unknown said...

//வாற்கோதுமைக் கள்ளோடு---sema translation...

Sathish said...

எந்திரனிலும், அஸ்க் லஸ்காவிலும் ஏற்கனவே நம் மனம் கவர்ந்த மதன் கார்கி, "பு"க்கு பிறந்தது "பூ"வாகாது என்பதை தனது இளமை துள்ளும் வரிகளில் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார்

பெண்கள் facebook ல தும்மினாதான் 1000 likes , ஆனால் கார்கி இனி நீ login மட்டும் செய்தாலே எனது 1000 likes ..

http://sathivenkat.blogspot.in/2012/06/facebook-1000-likes.html

marsjk said...

enna solla vareenga as varkothumai..\//oh.. u mean Malt

gnanam piraka glalam siraka.. nice lines