Feather Touch Entertainment
தடையறத் தாக்க
கேளாமலே
இசை : தமன்
இயக்கம் : மகிழ் திருமேனி
குரல் : ஆலாப் ராஜு, ரீடா
____________________________
கேளாமலே கேளாமலே
பாய்கிறாய் எனக்குள்ளே!
நாளேழுமே நாளேழுமே
தோய்கிறாய் எனக்குள்ளே!
மேலும் கீழும் மேலும் கீழும்
அலைகளின் மடியிலே ...
மிதவையாய் நீ ஆகிறாய்
வானம் ஏறி மேகம் கீறி
தூறல் தின்னும் பறவையாய்...
போகிறாய்....
_______________
> நீ கொட்டிச்சென்ற இன்பங்கள் அள்ளிட
> அண்டங்கள் போதாதென நான் கண்டேன்!
> நான் தேக்கி வைத்த தாகங்கள் சொல்லிட
> நேரங்கள் போதாதென நான் கண்டென்!
> யாரும் புகா ஆழத்தில் உன்னுள்ளே
> நீந்துதல் இன்பமென நான் கண்டேன்!
மேலும் கீழும் மேலும் கீழும்
அலைகளின் மடியிலே ...
மிதவையாய் நீ ஆகிறாய்
வானம் ஏறி மேகம் கீறி
தூறல் தின்னும் பறவையாய்...
போகிறாய்....
_______________
> நான் நீங்கிச் செல்லும் நேரத்தில் நீயுன்னை
> உள்வாங்கிக் கொள்ளுகிறாய் நான் கண்டேன்!
> நான் சிந்திச்செல்லும் முத்தங்கள் வீழும்முன்
> நீ தாங்கிக் கொள்ளுகிறாய் நான் கண்டென்!
> ஆடைகளை மீறினாய் நெஞ்சுக்குள்
> ஈரமாய் மாறுகிறாய் நான் கண்டேன்!
மேலும் கீழும் மேலும் கீழும்
அலைகளின் மடியிலே ...
மிதவையாய் நீ ஆகிறாய்
வானம் ஏறி மேகம் கீறி
தூறல் தின்னும் பறவையாய்...
போகிறாய்....
___________________
10 comments:
GREAT & CLASSY
vijay
GREAT & CLASSY
GREAT & CLASSY
GREAT & CLASSY
superb...
இசையுடன் வரிகளை கேட்ட பின்பே இதன் சுவை புரியும்..
இசையும் பாடல் வரிகளும் குழைந்து மிகவும் இனிமையான பாடலாக உருவெடுத்துள்ளது கேளாமலே !!
அருனமையான வரிகள்...
Indeed another beautiful creation..its a delight for a fan of yours sir....i loved this line "நான் தேக்கி வைத்த தாகங்கள் சொல்லிட
நேரங்கள் போதாதென நான் கண்டென்!"
I cherished kadhal sadugudu song lyrics by vairamuthu sir with your above line...."உன் உள்ளம் நான் காண என்னாயுள் பொதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் பொதாது"....long live your lyrics...its a bliss to read...
One of my Latest Favourite song,,,
Post a Comment