Tuesday, January 31, 2012

[Lyric] அழைப்பாயா?

Y Not Entertainment
காதலில் சொதப்புவதெப்படி
அழைப்பாயா? அழைப்பாயா?
இசை : தமன்
இயக்கம் : பாலாஜி
குரல்கள் : கார்த்திக் & ஹரிணி 

_______________________________________________

விழுந்தேனா? தொலைந்தேனா?
நிறையாமல் வழிந்தேனா?
இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்,
சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்.
காலில்லா ஆமை போலவே
காலம் ஓடுதே!
இங்கே உன் இன்மையை உணர்கிற போது
ஒரே உண்மையை அறிகிறேன் நானே.
எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது
உன் நெஞ்சிலும் உண்டா என்றெண்ணியே
இருதயம் துடிக்குதே!

அழைப்பாயா? அழைப்பாயா?
நொடியேனும் அழைப்பாயா?
பிடிவாதம் பிடிக்கின்றேன் முடியாமலே...!
அழைப்பாயா?

அழைப்பாயா? அழைப்பாயா?
படிக்காமல் கிடக்கின்றேன்
கடிகாரம் கடிக்கின்றேன் விடியாமலே...! 
அழைப்பாயா?

*

நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன்
நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லிப் பார்த்தேன்
நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன்
நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன்
நிலைமை தொடர்ந்தால்... என்ன நான் ஆகுவேன்?
மறக்கும் முன்னே
அழைத்தால்... பிழைப்பேன்...

அழைப்பாயா? அழைப்பாயா?
அலைபேசி அழைப்பாயா?
தலைகீழாய் குதிக்கின்றேன் குரல் கேட்கவே...!
அழைப்பாயா?

அழைப்பாயா? அழைப்பாயா?
நடுஜாமம் விழிக்கின்றேன்
நாட்காட்டி கிழிக்கின்றேன் உனைப் பார்க்கவே...!
அழைப்பாயா?

*

ஹே பாதி தின்று மூடிவைத்த தீனி போலவே
என் காதில் பட்டு ஓடிப் போன பாடல் போலவே
என் நாசி மீது வீசி விட்டு மாயமான வாசம் போலே
நீ பேசி வைக்கும் போது ஏக்கம் மூளும் நெஞ்சின் மேலே
சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே
இதயம் இங்கே  
வேறெதோ... நேருதே...

அழைப்பாயா? அழைப்பாயா?
தவறாமல் அழைப்பாயா?
தவறாக அழைத்தாலே அது போதுமே...! 
அழைப்பாயா?
அழைப்பாயா? அழைப்பாயா?
மொழியெல்லாம் கரைந்தாலும்
மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே!
அழைப்பாயா?

_______________________________________________

15 comments:

ammuthalib said...

//காலில்லா ஆமை போலவே
காலம் ஓடுதே!

யோவ்... உனக்கெல்லாம் மூளை தனியா செஞ்சாங்களா?

அதே ஆம தான்... அதே நேரம் தான்... அதே பழைய மொழிதான்...

it was magical the way you have used it...

கொன்னுட்ட போ...

Priya said...

Unarnthathai Maraikirom............ Felt the depth :) great.......

Priya said...

என் காதில் பட்டு ஓடிப் போன பாடல் போலவே
என் நாசி மீது வீசி விட்டு மாயமான வாசம் போலே
Just loved it and felt :)

Yaathoramani.blogspot.com said...

அருமையான சிந்தனை
இளமைத் துடிப்பும் முதிர்ச்சியின் ஞானமும்
ஒன்றாய்க் கலந்து செய்த ரஸவாதம்
மனம் கவர்ந்த படைப்பு
வாழ்த்துக்கள்

தர்ஷன் said...

அப்பா “பாறாங்கல்லை சுமந்து வழி மறந்து நத்தைக் குட்டி நகருது” என எழுதினால், மகன் ”காலில்லா ஆமை போலவே காலம் ஓடுதே!” என்கிறார். எப்படி பாஸ் இவங்க ரெண்டு பேருக்கு மட்டும் இப்படி தோணுது.

Marc said...

நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன் நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லிப் பார்த்தேன் நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன் நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன் நிலைமை தொடர்ந்தால்... என்ன நான் ஆகுவேன்? மறக்கும் முன்னே அழைத்தால்... பிழைப்பேன்...

உங்கள் எழுத்துக்களும் காலில்லாமல்
சிறகில்லாமல் பறக்கின்றன.

அருமையான கவிதை வாழ்த்துகள்

RAJIV GANDHI said...

நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன்
நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லிப் பார்த்தேன்
நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன்
நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன்
நிலைமை தொடர்ந்தால்... என்ன நான் ஆகுவேன்?
மறக்கும் முன்னே
அழைத்தால்... பிழைப்பேன்...

Kokilah Kanniappan said...

காதலில் பதிலுக்காகக் காத்திருப்பது சுகமான சுமை. மிகவும் ஆழமான சிந்தனை. உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்கவும் ஒரு திறமை வேண்டும். இனி அனைத்து காதலர்களுக்கும் உங்களின் அழைப்பாயா பாடலே தங்களின் உணர்வுகளை உரைக்கும் பதிலாகும்!

காதலில் சொதப்புவது எப்படி?
படத்தின் தலைப்பு- ஆனால்,
உங்கள் வரிகளில் புரிந்தது
காதலில் தொலைவது எப்படி என்று!

My favourite line "நிறையாமல் வழிந்தேனா?"
Extraordinary! I just love your tamil words! Thanks for this beautiful lyrics :-)

Bruno said...

Excellent !

Bruno said...

//அருமையான சிந்தனை
இளமைத் துடிப்பும் முதிர்ச்சியின் ஞானமும்
ஒன்றாய்க் கலந்து செய்த ரஸவாதம்
மனம் கவர்ந்த படைப்பு
வாழ்த்துக்கள்//

வழிமொழிகிறேன்

Ashwin said...

Hi Madhan,

Great Work :)
Loved Ennamo Yedho, Assk Laska and now addicted to Azhaipaaya. I am not able to figure out the meanings of all the lines though. I read up Nandini's critiques of your lyrics to get a better understanding. It would be great if you could post the translation / essence of every stanza.

Keep up the good work :) Looking forward to more :)

vasan said...

You showed that science fiction also could be poetic through your lyrics in 'Enthiran'. Without knowing that you are the author I wondered who penned the lyrics of of this song "Azhaippaya". 'Thavarugal unargirom' is another nice work. The genius found in 'Enthiran' has come to stay. We are proud of you, ' Kavi Ilavarasare"!

dafodil's valley said...

காதலான வரிகள் ஒவ்வொன்றும்!

என் dialer tune இதுதான் இப்போ...! :) :) :)

Simply superb! :)