படம் : பயணம்
பாடல் : நீர்ச்சிறை
இசை : பிரவீன் மணி
இயக்கம் : ராதாமோகன்
____________________________________________________
நீர்ச்சிறைக் கிழிய கருவதன் பயணம்
வார்த்தைகள் தெளிய மழலையின் பயணம்
கோர்த்திடும் பொய்யில் குழந்தையின் பயணம்
முடியும்
பயணம்!
கனவுகள் குறைய இளமையின் பயணம்
காதல்கள் மறைய முதுமையின் பயணம்
ஊர்மறந்தொழிய மரணத்தின் பயணம்
முடியும்
பயணம்!
வானினைச் சேர தீயின் பயணம்!
பூமியைச் சேர நீரின் பயணம்!
வெற்றிடம் தேடும் காற்றின் பயணம்!
எல்லைகள் தேடும் வானின் பயணம்!
பாதை போகும் போக்கில்
பாதம் போகும் பயணம்!
முதலோ முடிவோ அறியா
கனவின் கனவில் பயணம்!
நாளைக் காலை காண
ஆயுள் ஏந்திப் பயணம்!
விடியும் விடியும் என்றே
முடியும் முடியும் பயணம்!
கிரகங்கள் தாண்டி உயிர்களைத் தேடும்
உயிரினைத் தாண்டி எதுவெனத் தேடும்
தனையிழந்து வெளியினில் தேடும்
மனிதனின் நெடும் பயணம்!
முடிந்திடப்போகும் பயணத்தின் நீளம்
கடைசியில் நான்கு மடங்குகள் கூடும்
முடிவடைந்த புள்ளியில் மீண்டும்
தொடங்கிடும் ஒரு பயணம்!
______________________________________________
14 comments:
//கிரகங்கள் தாண்டி உயிர்களைத் தேடும்
உயிரினைத் தாண்டி எதுவெனத் தேடும்
தனையிழந்து வெளியினில் தேடும்
மனிதனின் நெடும் பயணம்//
my fav lines..
//முடிந்திடப்போகும் பயணத்தின் நீளம்
கடைசியில் நான்கு மடங்குகள் கூடும்
முடிவடைந்த புள்ளியில் மீண்டும்
தொடங்கிடும் ஒரு பயணம்!//
honestly these are the lines that are taking this lyric to another level. loved the finish !
Beautiful lyrics...
ஒவ்வொரு வரியும் அருமை. ஆழமானது.உங்கள் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள் :)
உங்கள் தமிழ் அனைத்தும் அழகு ..தொடர்ந்து இந்த மாதிரியே நல்ல வரிகளை தாருங்கள் .. அனைத்தும் புதிய வார்த்தைகளும் வரிகளும் ... :-)
sorry to say that your Neersirai song misses the tempo of its expressions because of the music and singer. listen to Aalaap raju for your song ennamo etho. oru jeevan venum pattuku. Lyricist must also have the say to get the song sang the way the syllables need to be. tamil is not just a language - it is a beauty - your words are so digital like flowers and so it has to be kept alive
i jus loved the lines on manidhanin nedumpayanam.. :) :)
ulagaiyum thaandi uyirinai thedugiran.. uyir endral edhu endru unaraamale.. kaanbavalidam ellam kaadhaliyai thedugiraan.. kadhal enna enbadhai unaraamale..
http://imaiyavanmaithunan.blogspot.com/2009/05/blog-post_4142.html am a composer too.. this song of mine, has a very similar tune to the payanam theme song :) :)
wish to meet you sometime.
//நீர்ச்சிறைக் கிழிய கருவதன் பயணம்///
நீர்ச்சிறைக் - தாயின் பால்குடம் இதற்க்கு இப்படி ஒரு வார்த்தை ஜாலமா அருமை!
Simply wonderful - sets context for the movie....
//நாளைக் காலை காண
ஆயுள் ஏந்திப் பயணம்!
விடியும் விடியும் என்றே
முடியும் முடியும் பயணம்!
நான்கே வரிகளில் நன்கு வேதத்தின் பணியை முடித்துவிட்டீர்...அருமை...போழுதிருந்தால் www.sidharalkal.blogspot.com படித்து பாருங்கள்...இவைகள் என்னுடைய முயற்சிகள்
மிகவும் ஆழமான தத்துவ சிந்தனைகள் நிறைந்த வரிகள்....அருமையான படைப்பு....தொடரட்டும் உங்கள் காவியப்படைப்புகள்...வாழ்த்துக்கள் !! :-)
Thank you all for taking time to share your fav lines and your comments. Very happy to see your comments :)
absolutely beautiful karki sir.
Post a Comment