இயக்கம் : ராஜா
_____________________
வானம் புதிது
வாசங்கள் புதிது
வாழ்க்கை வரையும்
வண்ணங்கள் புதிது
சாலை புதிது
சாரல்கள் புதிது
இதயம் உறையும்
சப்தங்கள் புதிது
கடவுள் உணரும் தருணம் புதிது
அடிக்கடி நேரும் மரணம் புதிது
______________________________
மௌனம் கொள்ளும் நீளம் என்ன
பார்வை செல்லும் ஆழம் என்ன
உண்மை சொல்லவா - மெல்ல
உள்ளம் சொல்லவா?
தன்னந் தனிப்படத்
தவித்ததும் துடித்ததும்
எண்ணக் கிறுக்கலை
இருட்டிடம் படித்ததும்
ஒற்றைப் படுக்கையில்
உனக்கிடம் பிடித்ததும்
எந்தன் தலையணை
உனக்கிணை நடித்ததும்
எந்தன் கண்ணிமைகள் பாரமுற
உன் நினைவு தூற வர
ஓர விழி ஈரமுற நேரும் போது
( வானம் புதிது )
_______________________________
அன்று கண்ட கானல் எல்லை
இன்று கண்ணில் காணவில்லை
காதல் கொண்டதால் - கொஞ்சம்
காமம் கொண்டதால்
உந்தன் விரல் படக்
குரல்வளை அடைத்தது
எந்தன் பரம்பரை
வரம்புகள் உடைத்தது
உன்னை நெருங்கிட
நரம்புகள் புடைத்தது
ஏதோ இடித்ததை
விபத்தெனத் துடைத்தது
இந்தப் பாதை தடம் மாறியது
போதை தலைக்கேறியது
நீயிருக்கும் தூரம் அது தீரும் போது
( வானம் புதிது )
______________________________
3 comments:
அடிக்கடி நேரும் மரணம் புதிது...
மதன் இந்த வரியை ரசித்தேன்.வாழ்த்துக்கள்.
எண்ணக் கிறுக்கலை
இருட்டிடம் படித்ததும்
ஒற்றைப் படுக்கையில்
உனக்கிடம் பிடித்ததும்
எந்தன் தலையணை
உனக்கிணை நடித்ததும்
- கவிதை கவிதை - அபிராமி அபிராமி.
Jokes apart, the above lines were really superb.
வரும் காலங்களிலும் இதேபோல் எளிமையான ஆனால் ஆழமான கவிதைகளைப் படைக்க வாழ்த்துக்கள்.
உந்தன் விரல் படக்
குரல்வளை அடைத்தது
எந்தன் பரம்பரை
வரம்புகள் உடைத்தது
எண்ணக் கிறுக்கலை
இருட்டிடம் படித்ததும்
ஒற்றைப் படுக்கையில்
உனக்கிடம் பிடித்ததும்
எந்தன் தலையணை
உனக்கிணை நடித்ததும்..
Really Great Sir..
Post a Comment