AGS Entertainment
மாற்றான்
பாடல் : கால் முளைத்த பூவே!
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : கே வி ஆனந்த்
குரல்கள் : ஜாவேத் அலி, மஹாலக்ஷ்மி ஐயர்
_________________________________________
♂
கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா!
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா!
கேமமில் பூவின் வாசம் அதை - உன்
இதழ்களில் கண்டேனே!
சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்
விழிகளின் விளிம்பினில் கண்டேன்!
♀♂
அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.
______________
♂
நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே!
♀
தலைகள் குனிந்ததோ?
மமதை அழிந்ததோ?
கடமை முடிந்ததோ?
பிறந்த நொடியிலே!
♂
ஹே பெண்ணே...உன் வளைவுகளில்
தொலைவதுபோலே உணருகிறேன்
இடையினிலே திணறுகிறேன்
கனவிதுதானா… வினவுகிறேன்.
♀♂
அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.
______________
♀
இரவெலாம் நிலவு எரிகையில்
திரிகளாய் விரல்கள் திரியுதே!
அருகிலே நெருங்கி வருகையில்
இளகியே ஒழுக்கம் உருகுதே!
♂
நிலவு எரிகையில்
விரல்கள் திரியுதோ?
நெருங்கி வருகையில்
ஒழுக்கம் உருகுதோ?
♀
எனை ஏனோ... உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
இடைவெளியை சுருக்குகிறாய்
இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்!
♀♂
அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் ம்ம்
இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் ம்ம்
உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்
எரியும் வெறியை தெறித்தாய்.
______________
11 comments:
புதிது
Really Super Mr. Madan Karky.. i m a fan following on ur works.. Great going.. Keep up the good work.. Hope ur lyrics library software is also coming up well..Full respect for yu.. :) :)
romba nalla irukku :))
மமதை , இலகியே ,கால் முளைத்த பூவே & குமமேல அற்புதமான வார்த்தைகள் .
Excellent!!!
//இரவெலாம் நிலவு எரிகையில்
திரிகளாய் விரல்கள் திரியுதே!
அருகிலே நெருங்கி வருகையில்
இளகியே ஒழுக்கம் உருகுதே... rompa nalla irukku anna... mass :D
Just listen to this song, Simply superb but i don't think this song will replace "Ennamo Etho" in our Heart which you done it in previous KV film
Loving the lyrics. Great job! :)
படத்துல இந்த பாட்டு தான் நல்லா இருக்கு...
Thanks to karky... :*
கேட்டறியாத தமிழ்வரிகள்...
நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே!
super lines
Post a Comment