Friday, July 20, 2012

[lyric] வாய மூடி



UTV Entertainment
முகமூடி

பாடல் : வாய மூடி
இசை : கே
இயக்கம் : மிஷ்கின்
குரல் : ஆலாப் ராஜு

_____________________________________

வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!

#### நேற்று

கடிகாரம் தலைகீழாய் ஓடும்  - இவன்
வரலாறு எதுவென்று தேடும்!
அடிவானில் பணியாது போகும் - இவன்
கடிவாளம் அணியாத மேகம்!

பல நிலவொளிகளில்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில்
கனவுகள் இல்லை ஏதும்.

காணாமலே
போனானடா!
ஏனென்று கேட்காதே போடா !

#### இன்று

பார்வை ஒன்றில் காதல் கொண்டா,
எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்?
பேரே இல்லா பூவைக் கண்டா,
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்?

என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?

நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ?

ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்தக் காதல்?

#### நாளை

நாளை என் காலைக்
கீற்றே நீ தானே!
கையில் தேநீரும் நீ தானடி!

வாசல் பூவோடு
பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீ தானடி!

கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?

கண் மூடிடும்
அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!

20 comments:

Desingh said...

இதில் அணைத்து பாடல்களையும் கேட்டேன்.. ரொம்ப நல்லா இருக்கு, தங்களின் பாடல்கள் எப்பவுமே superb

Founder said...

கன்னம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
it is imagination for all humen's future one. You showed it using amazing words thanks.

Testing said...

Nice lyrics.

Desingh said...

Always Top Karky

Desingh said...

Superb melody and lyrics

karthikeyansethuraman said...

கவர்ந்த வரிகள்

என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?

sathish said...

கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ? awesome

sathish said...

கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ? awesome

Unknown said...

Karky அவர்களின் பாடல் வரிகள் அனைத்தும் அற்புதம்..
நுண்பூகம்பம் வார்த்தை, புதுமை + இனிமையாக இருக்கிறது....!
புத்துணர்ச்சிகளை பாடல் வரிகளில் மிளிரச் செய்யும் புதுமைக் கவிஞருக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள் ...!

Unknown said...

Karky அவர்களின் பாடல் வரிகள் அனைத்தும் அற்புதம்..
நுண்பூகம்பம் வார்த்தை, புதுமை + இனிமையாக இருக்கிறது....!
புத்துணர்ச்சிகளை பாடல் வரிகளில் மிளிரச் செய்யும் புதுமைக் கவிஞருக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள் ...!

Bavee said...

Lyric engineering brings freshness to ur lyrics n songs :):) very soon addicted to vaya moodi song :):)and ofcourse mayavi too...Very very happy to see u upcoming with successful endeavours :):)பிடிச்ச வார்த்தைகள் சொல்லிட்டே போகலாம்..Congrats Karki Sir..
-Baveethra

Yaathoramani.blogspot.com said...

காலத்தை வென்ற காதலின் பெருமை
சொல்லிச் செல்லும் வரிகள் யாவும்
அருமை அருமை அருமை
மனம் கவர்ந்த கவிதை
வாழ்த்துக்கள்

Desingh said...

இதுவரை இந்த பாடலை 40 முறை கேட்டு விட்டேன். again going to listen.

thanks to karky.

Unknown said...

S
a
Always tamil is on top

Unknown said...

The Lyrics which i liked the most till date is "Vaayamoodi Summa Iruda"

Hats off to Karky Sir

Sriiiii said...

நாளை பகுதியில் உள்ள அணைத்து வரிகளுமே அருமை
வாழ்த்துக்கள்

பாடல் கேட்கா விட்டாலும் வரிகள் மனதில் ஓடும் அளவிருக்கு அருமையாய் இருக்கிறது

Unknown said...

போதும் இன்னும் காதல் அதிகமாகின்றது அவள் மீது இந்த பாடல் கேட்டால்!!!!!!!

Abitha said...

music n voice gave soul to your lovely words!!!pleasing to hear..

Durga said...

என்னை மிகவும் கவர்ந்த வரிகள்...

"கண் மூடிடும்
அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!"

Hemanth said...

superrr