இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்னோடு
மின்னல்கள் கண்ணோடு
கூகுல்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு
iRobo உன் காதில்
ஐ லவ் யூ சொல்லட்டா?
>I am a super girl
>உன் காதல் rapper girl
என்னுள்ளே எண்ணெல்லாம்
நீதானே நீதானே
உன் நீலக் கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீலப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் engine நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் என்னை அணைப்பேன்
எந்நாளும் எப்போதும்
உன் கையில் பொம்மையாவேன்
>கட்டிக்கொள்ளும் போதும்
>தொட்டுப்பேசும் போதும்
>ஷாக்கடிக்கக் கூடும்
>காதல் செய்யும் நேரம்
>மோட்டார் வேகம் கூடும்
>இரவில்... நடுவில்...
>பேட்டரிதான் தீரும்
மெமரியில் குமரியை
தனிச் சிறை பிடித்தேன்
shutdown-ஏ செய்யாமல்
இரவினில் துடித்தேன்
sensor எல்லாம் தேயத்தேய
நாளும் உன்னை படித்தேன்
உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன்
எச்சில் இல்லா எந்தன் முத்தம்
சர்ச்சை இன்றிக் கொள்வாயா?
ரத்தம் இல்லாக் காதல் என்று
ஒத்திப் போகச் சொல்வாயா?
உயிரியல் மொழிகளில்
எந்திரன் தானடி
உளவியல் மொழிகளில்
இந்திரன் நானடி
சாதல் இல்லா சாபம் வாங்கி
மண்மேலே வந்தேனே
தேய்மானமே இல்லா
காதல் கொண்டு வந்தேனே
>முட்டாதே ஓரம்போ - நீ
>காலைச் சுத்தும் பாம்போ
>காதல் செய்யும் ரோபோ
>தேவையில்லை போ போ