Monday, February 22, 2010

[song] துருக்கியின் தெருக்களில்

நீ துருக்கியின் தெருக்களில்

இருந்திருந்தால்... - நான்

‘செனி செவியோரம்’ கூவிடுவேன்


நீ ரைன் நதிக் கரைகளில்

நடக்கையிலே... - நான்

‘இச் லிபெ டிச்’ என உச்சரிப்பேன்


நீ சின் லின் மலைகளில்

அலைகையிலே... - ‘வோ

ஐ நீ’ என்றுனை அணைத்திடுவேன்


நீ ஃப்ரென்சு முத்தம்

கொடுக்கையிலே... - நான்
‘ஜே டேய்ம்’ ‘ஜே டேய்ம்’ ஜபித்திடுவேன்

_______________


பாஸ்னிய பாஷை

வசமிருந்தால்... - நான்

‘வாலிம் தே’ என வாய் மொழிவேன்


லங் காவித் தீவில்

உன் காதில் - ‘அகு

சிண்டா படாமு’ சிந்திடுவேன்


மேட்ரிட் நகரில்

தேவதையே - நான்

‘தே அமோ’ என்றே பாடிடுவேன்


சௌதியின் பாலை

சுடு மணலில் - நான்

‘பஹெபிக்’ என்றுனை சுமந்திடுவேன்

_______________


வார்ஸா வீதிப்

பனிகளிலே... - நான்

‘கொச்சம் லை’ என கொஞ்சிடுவேன்


தாய்லாந்த் துரியன்

காடுகளில் - நான்

‘பொம்ரக் குன்’ என பொங்கிடுவேன்


கிளிநொச்சியில் நீ

எழும்பையிலே - உனை

‘காதலிப்பதாய்’ கதைத்திடுவேன் - நீ


தாய்த் தமிழ் நாட்டில்

பிறந்ததனால் -

‘ஐ லவ் யூ’ என்கிறேன்....