Showing posts with label lyrics. Show all posts
Showing posts with label lyrics. Show all posts

Wednesday, November 07, 2012

[lyric] விட்டு விட்டுத் தூவும்


Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
விட்டு விட்டு
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : ராகுல் நம்பியார், பார்கவி 
_________________________________________


♀
விட்டு விட்டுத் தூவும்
வெட்கங்கெட்ட வானம்
கிட்டத் தட்ட என் நெஞ்சமோ?

முட்ட வந்த பூவின்
முட்கள் குத்தும் என்றே
வட்டமிட்ட வண்டஞ்சுமோ?


சொல்லாமல் மோதும் 
சில்லென்ற காற்றைப் போல நீயும் வந்தாய்
நில் என்ற போதும்
நில்லாமல் ஆடைக்குள்ளே நீ புகுந்தாய்

கல்லொன்று வீசி 
உள்ளத்தின் ஆழம் என்ன தேடுகின்றாய் 
தெள்ளோடை என்னை
உள்ளங்கையோடு அள்ளி ஓடுகின்றாய்


♂  
மொத்த மொத்த நெஞ்சை 
சத்தமிட்டுச் சொன்னால்
செத்து கித்துப் போவேனடி 

குத்தும் என்று இல்லை
தித்திக்கின்ற தேனில் 
புத்தி கெட்டுப் போவேனடி


நில்லாமல் பேசும் 
நீரோடை போலே என்னுள் பாய்கின்றாய்
புல்லோடு வீழும்
பூவாகி எந்தன் தோளில் சாய்கின்றாய்


பொல்லாத போதை 
என்றாகி என்னுள் ஏறி ஆடுகின்றாய்
செல்லாத பாதை
ஒன்றோடு என்னைக் கூட்டி ஓடுகின்றாய்
________________________________________




[lyric] மேகத்திலே மேலாடை


Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
மேகத்திலே மேலாடை
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : ஷ்ரேயா கோஷல்
___________________________________


மேகத்திலே மேலாடை
காலை நிலா, காலாடை
ஊலலலா உள்ளந்தான்
நானணியும் உள்ளாடை

புல் மீது தூங்குவேன்
அதுவே என் மாளிகை
செல் என்ற பின்புதான்
நகரும் என் நாழிகை 

என் பூமி பூமி அது வேறு
என் விழியால் அதை நீ பாரு
பூமி பூமி அது வேறு
என் விழியால் அதை நீ பாரு


பூ ஒன்று திறக்கும் போது
இமைதட்டிச் சிரிப்பேனே
ஈ மீது பூ உதிர்ந்தாலோ
இரண்டுக்கும் அழுவேனே

தேய்பிறை அதன் சோகம் கண்டால்
தேவதை அதில் ஊஞ்சல் செய்வேன்
தேவைகள் ஏதும் இல்லை என்றால்
தெய்வமே இனி நான் தானே

யாரும் இல்லாத போதில்
சத்தமில்லாமல் காதில்
எந்தன் பேர் சொல்லி காற்றும் வீசும்

பூமி பூமி இது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு
பூமி பூமி அது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு


வானோடு மழை வரக் கூடும்
மின்னல் போடும் மின்னஞ்சல்
புயல் ஒன்றின் தொலைநகலாகும்
இன்று வீசும் மென் தென்றல்

தூறலே குறுஞ்செய்தி ஆகும்
வானவில் பின்னணியில் தோன்றும்
அழைக்கிறாய் ஒரு இரகசியம் சொல்ல
அருவிகள் அழைப்பொலியாகும்

பேச காசேதும் இல்லை
ஊரும் ஏன் பேச வில்லை
ஊடகம் எங்கும் விளம்பரம் உனக்கில்லை


பூமி பூமி இது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு
பூமி பூமி அது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு
_____________________________________




[lyric] Adidas


Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
அடிடாஸ்
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : மனோ
________________________________________



அடிடாஸ் மாட்டிக்கோ
அதிரடி காட்டிக்கோ 
அடிக்கடி ஆடிப் பாத்துக்கோ
ramp walking பொண்ணெல்லாம்
நேரில் பாக்குறோம்
அவனுக்கு thanks போட்டுக்கோ
fashion tvல பாத்ததெல்லாம்
வாசம் பாக்கத்தான் விட்டுட்டானே
ஏதும் கேக்காம எல்லாந்தந்து
போதுஞ் சொல்லத்தான் வெச்சுட்டானே

ஹே தல தல சுத்துதே
மூச்சே முட்டுதே
சொர்கங் காட்டிப்புட்டானே
ஹே அட மழ கொட்டுதே
மின்னல் வெட்டுதே
மேகம் ஆட்டிவிட்டானே

அஞ்சாறு வயசோடு போட்டதெல்லாம்
அஞ்சாம பதினெட்டில் போட்டு வந்தா(ள்)
கொஞ்சூண்டு துணியோடு நீயும் நின்னா
யாரு கிட்ட நியாயம் கேப்பேன் கந்தா?

இந்த orange பேண்டோட உன்னப் பாத்தா
fantaந்னு சொல்லுவா எங்க ஆத்தா
தொட்டாலே உஸ்ஸுன்னு சத்தம் போட்டா
நீதானே என் கையில் cocacola

ஹே தல தல சுத்துதே
மூச்சே முட்டுதே
சொர்கங் காட்டிப்புட்டானே
ஹே அட மழ கொட்டுதே
மின்னல் வெட்டுதே
மேகம் ஆட்டிவிட்டானே

axe scent போடாமலே நம்மச் சுத்தி
எக்கச்சக்க பொண்ணு எல்லாம் வந்தாச்சுடா
six seven pack எல்லாம் இல்லாமலும்
chicks எல்லாம் நம்ம மேல சாயும்

அட நம் நேரம் உச்சத்தில் ஏத்திவெச்சான்
எங்கெங்கோ மச்சத்த அச்சடிச்சான்
high heels மாட்டிக்கும் பூவ எல்லாம்
ஐய்யோ என் தோட்டத்தில் நட்டு வெச்சான் 

ஹே தல தல சுத்துதே
மூச்சே முட்டுதே
சொர்கங் காட்டிப்புட்டானே
ஹே அட மழ கொட்டுதே
மின்னல் வெட்டுதே
மேகம் ஆட்டிவிட்டானே

____________________________

Thursday, August 09, 2012

[lyric] கால் முளைத்த பூவே!


AGS Entertainment
மாற்றான்
பாடல் : கால் முளைத்த பூவே!
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : கே வி ஆனந்த்
குரல்கள் : ஜாவேத் அலி, மஹாலக்ஷ்மி ஐயர்
_________________________________________

♂ 
கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா!
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா!

கேமமில் பூவின் வாசம் அதை - உன்
இதழ்களில் கண்டேனே!
சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்
விழிகளின் விளிம்பினில் கண்டேன்!

♀♂
அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.
______________

♂ 
நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே!

♀
தலைகள் குனிந்ததோ?
மமதை அழிந்ததோ?
கடமை முடிந்ததோ?
பிறந்த நொடியிலே!

♂
ஹே பெண்ணே...உன் வளைவுகளில்
தொலைவதுபோலே உணருகிறேன்
இடையினிலே திணறுகிறேன்
கனவிதுதானா… வினவுகிறேன்.

♀♂
அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.
______________

♀
இரவெலாம் நிலவு எரிகையில்
திரிகளாய் விரல்கள் திரியுதே!
அருகிலே நெருங்கி வருகையில்
இளகியே ஒழுக்கம் உருகுதே!


♂
நிலவு எரிகையில்
விரல்கள் திரியுதோ?
நெருங்கி வருகையில்
ஒழுக்கம் உருகுதோ?


♀
எனை ஏனோ... உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
இடைவெளியை சுருக்குகிறாய்
இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்!


♀♂
அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் ம்ம்
இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் ம்ம்
உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்
எரியும் வெறியை தெறித்தாய்.
______________

Friday, July 20, 2012

[lyric] வாய மூடி



UTV Entertainment
முகமூடி

பாடல் : வாய மூடி
இசை : கே
இயக்கம் : மிஷ்கின்
குரல் : ஆலாப் ராஜு

_____________________________________

வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!

#### நேற்று

கடிகாரம் தலைகீழாய் ஓடும்  - இவன்
வரலாறு எதுவென்று தேடும்!
அடிவானில் பணியாது போகும் - இவன்
கடிவாளம் அணியாத மேகம்!

பல நிலவொளிகளில்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில்
கனவுகள் இல்லை ஏதும்.

காணாமலே
போனானடா!
ஏனென்று கேட்காதே போடா !

#### இன்று

பார்வை ஒன்றில் காதல் கொண்டா,
எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்?
பேரே இல்லா பூவைக் கண்டா,
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்?

என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?

நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ?

ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்தக் காதல்?

#### நாளை

நாளை என் காலைக்
கீற்றே நீ தானே!
கையில் தேநீரும் நீ தானடி!

வாசல் பூவோடு
பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீ தானடி!

கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?

கண் மூடிடும்
அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!

Thursday, June 07, 2012

[lyric] நீ இன்றி


AG Creations
பொன் மாலைப் பொழுது
பாடல் : நீ இன்றி [அந்தாதி]
இசை : சத்யா
இயக்கம் : துரை
குரல் : சத்யா
_______________________

நீ இன்றிக் கிடக்கும் இருக்கை அருகே
நெஞ்சம் ஏனோ தவழுது?

தவளைக் கிணறாய் சுருங்கும் உலகம்
கொஞ்சம் மெதுவாய் சுழலுது

சுழலின் உள்ளே உறங்கும் மீனாய்
வகுப்பில் நானும் இருக்கிறேன்

இறுக்கிப் பிடிக்கும் உனது நினைவில்
உறக்கம் கலைந்தேன். நீ எங்கே?

எங்கே எங்கே எங்கே? 
ஓஹொ... ஓ...

ஓர் ஆண்டிலே நேராதது
விலகித் தவிக்கையில் நிகழ்வது ஏன்?

ஏனோ உனைக் காண்பேனென
இதயம் துடிக்கையில் உணருகிறேன்

உனது சுவடுகள் தொடருகிறேன்
தொடங்கும் இடத்தினில் சேருகிறேனே
சேரும் வரை கண்ணில் தூக்கம் தோன்றாது
தோன்றும் வலி நீ வரும் வரையினில் நீங்காது

_______________________


[lyric] வாற்கோதுமைக் கள்


AG Creations
பொன் மாலைப் பொழுது
பாடல் : வாற்கோதுமைக் கள் 
இசை : சத்யா
இயக்கம் : துரை

__________________

வாற்கோதுமைக் கள்ளோடு
வா தோழனே என்னோடு
ஊர்விட்டோடி காற்றை சுவாசிக்கலாம்

நாற்காலிகள் மேசைகள் 
நாள்தோறுமே தேய்த்தோமே
மேற்கூரையாய் வானம் நேசிக்கலாம்

கோப்புகளோடு கொட்டிய குப்பை
கோப்பைகள் முட்டி மறந்திடுவோம்!
பகலிரவைந்தும் நிகழ்த்திய தப்பை
ஓரிரு நாட்கள் துறந்திடுவோம்!

தோள்கள் உரசிப் பேசிக் கிடக்க
வாரக் கடைசி வந்ததடா!
செல்லிடப்பேசி மூடி அணைக்க
வாரக் கடைசி வந்ததடா!

வாற்கோதுமைக் கள்
சோர்வோயவே கொள்
_____________________

விரிவுரை எல்லாம் வரிவரியாக
எழுதி விரலும் தேய்ந்ததே
அறிவுரை கேட்டு சரிசரிசொல்லி
வறண்டு குரலும் காய்ந்ததே

தேயும் நிலவென 
புன்னகையும் சுருங்கி
யானை மிதிபடும்
அப்பளமாய் நொறுங்கி

ஞானம் பிறக்க ஞாலம் சிறக்க
வாரக் கடைசி வந்ததடா
மேற்கில் பறக்க ரெக்கை விரிக்க
வாரக் கடைசி வந்ததடா
_______________________

சங்கை ஊதித்  திங்கள் வந்தது
ஜவ்வாய் மாறிச் செவ்வாய் வந்தது
பூதம் போலொரு புதனும் வந்திடும் செல்லும்
வியாதித் தீயென வியாழன் வந்ததும் கொல்லும்
கவலைக்கிடமாய் நிலமை நிலமை 
தொடரும் தொடரும் தொடரும் தொடருமே

வெள்ளிக்கிழமை வந்தால் ஏனோ
உள்ளம் உச்சம் துள்ளுதோ?
யார் கையிலே யார் பையிலே 
இன்னும் மிச்சம் உள்ளதோ… 
... வாற்கோதுமைக் கள்ளோடு
வா தோழனே என்னோடு
ஊர்விட்டோடி காற்றை சுவாசிக்கலாம்
_________________________

புத்தகம் எல்லாம்
மூளை திணித்தே
மந்தையில் ஆடாகினோம்

ஆந்தைகள் போலே
கண்கள் விழித்தே
மண்டையில் சூடாகினோம்

நுரையீரல் எல்லாம்
வகுப்பறை வாசம்
அதை நீக்கத் தானே வழி தேடினோம்

நுனிநாக்கும் தானாய்
ஆங்கிலம் பேசும்
அதைப் போக்கத் தானே தமிழ் பாடினோம்

நிலவோடு கரைகள் குறையில்லை என்றே
அளவோடு ஏதும் பிழையில்லை என்றே... 
... வாற்கோதுமைக் கள்ளோடு
வா தோழனே என்னோடு
ஊர்விட்டோடி காற்றை சுவாசிக்கலாம்
___________________________

[lyric] Masala Chicks


AG Creations
பொன் மாலைப் பொழுது
பாடல் : Masala Chicks
இசை : சத்யா
இயக்கம் : துரை
குரல் : ரம்யா 
_______________

We are just a gang of six
They call us all masala chicks
Check us out we’ve got some tricks
We’re butterflies when shutter clicks

Reebokல ஸ்கூல சுத்துற 
Nemo கூட்டம் Masala Chicks

Facebookல அச்சுன்னு தும்மினா
thousand likes Masala Chicks

homework எல்லாம் outsource பண்ணுற
OMG Masala Chicks

Dirty Naughty Jokes எல்லாம் 
By heartஆய் சொல்லும் Masala Chicks

weekends only மட்டுமே
freaksஆ மாறும் Masala Chicks!!!

Masala Chicks!!!
________________

எங்க life-ஏ எங்க choice-ஏ
sound ஏறும் எங்க voice-ஏ
விளையாடுற மூடுல மட்டும்
boys எல்லாம் எங்க toys-ஏ

ATM கார்டுக்கும் 
boyfriend ஆகும் லூசுக்கும்
வித்தியாசம் என்னென்னென்னு பாப்போம்

ஷாப்பிங் மால் கூட்டிப்போய்
வெக்கமெல்லாம் இல்லாம
mannequin போட்டதெல்லாம்  கேப்போம்

Masala Chicks!!!
_________________

sixteenஇல் மொளச்சது வாலு
skateboardஇல் பறக்குது காலு
ச்சுச்சும்மா அதிருது schoolஉ
இனி நாங்க வெச்சது ruleஉ

Mottoவ tattoo போட்டோம்
Blackberry வீட்டில் கேட்டோம்
QWERTY keypad தட்டி
Cuteஆ tweetஅ போட்டோம்

பசி வந்தா K.F.C
thirsty ஆனா coke pepsi
caffeine தான எங்களுக்கு மூச்சு!

கோவில் பக்கம் கை வீசி
நாங்க போனா BBC
Channel எல்லாம் எங்க பத்தி பேச்சு!

Masala Chicks!!!
___________________

Tuesday, January 31, 2012

[lyric] பார்வதி பார்வதி


Y Not
காதலில் சொதப்புவது எப்படி
பார்வதி பார்வதி
இசை : தமன்
இயக்கம் : பாலாஜி
குரல் : சித்தார்த்
_______________________________________________

கல்லு மண்ணு காணும் முன்ன 
காதல் ஒண்ணு உண்டாச்சு
ஆணும் பொண்ணும் காதலிக்க
பூமி இங்கு ரெண்டாச்சு
பட்டு பட்டுக் கெட்டாலும் 
கிட்டத்தட்டச் செத்தாலும்
ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம்
காதலித்து சொதப்புவோம்!
காதலித்து சொதப்புவோம்!

*

டேய்.. விடுங்கடா… 
classஉக்குப் போய்… படுங்கடா
என் கொடுமைய 
பொலம்பத்தான் விடுங்கடா
போனதே போனதே ஆயிரங்-கால்
ஃபோனில் எந்தன் பேரைக் கூட தூக்கிவிட்டாள்
கோடி சாரி சொல்லி போட்ட எஸ்ஸெமெஸ்ஸை
குப்பை லாரி ஏத்தி விட்டாள்
it’s over... it’s over…
எல்லாமே is over... 
status single மாற்றி விட்டாளே!

*

பார்வதி… பார்வதி…
பாதி ரூட்டில் தள்ளி விட்டாளே
பார்வதி… பார்வதி…
நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே
பார்வதி… பார்வதி… 
போதும் என்று சொல்லி விட்டாளே
பார்வதி… பார்வதி…
காதலுக்கு கொள்ளியிட்டாளே

*

டேய்.. கடவுளே… 
உனக்கென்ன குற வெச்சேன்?
என் கதையில
tragedy ஏன் வர வெச்ச?
ஊரெலாம் சுத்திட யாரிருக்கா?
பைக்கில் என்னை கட்டிக்கொள்ள யாரிருக்கா?
மூவி போக மூடு மாத்த யாரிருக்கா?
மோட்டிவேஷன் யாரிருக்கா?
it’s over… it’s over
எல்லாமே is over
என்று சொல்லி ஓடி விட்டாளே

*

பார்வதி… பார்வதி...
கும்பலோடு சுத்த விட்டாளே
பார்வதி… பார்வதி…
முத்தவிட்டு கத்த விட்டாளே
பார்வதி… பார்வதி…
சங்கு ஊதி மூடி விட்டாளே
பார்வதி… பார்வதி…
சிங்கிள் சிங்கம் ஆக்கி விட்டாளே

_______________________________________________






Wednesday, November 16, 2011

[Lyric] அனாமிகா அனாமிகா

மோகனா மூவீஸ்

மௌனகுரு

அனாமிகா அனாமிகா

இசை : தமன்

இயக்கம் : சாந்தகுமார்

குரல் : கார்த்திக், ஹரிணி

_________________________________


அனாமிகா ஹே அனாமிகா

அடிமனவெளிகளில் அனாமிகா

அனாமிகா ஹே அனாமிகா

அலையென அலைந்திடும் அனாமிகா


அனாமிகா ஹே அனாமிகா

அடைமழைக்குடை என அனாமிகா

அனாமிகா ஹே அனாமிகா

அறையினில் பிறையென அனாமிகா



>என் இதயத் திசைமானி

>காட்டுகின்ற திசையில் நீ

>என்னவென்று அவதானி

>காதல்தானா?


>உன் விழியில் வாழ்வேனா

>உன் நிழலில் வீழ்வேனா

>கேள்விகேட்கும் நெஞ்சோடு

>காதல்தானா?


ஹே ஹே உன் அருகிலே

நொடிகளின் இடைவெளி பெருகிடக் கண்டேன்

ஹே ஹே உன் அருகிலே

புதுஒரு உறவினை அரும்பிடக் கண்டேன்

ஹே ஹே என் அருகிலே

உனைஉனை நீயே விரும்பிடக் கண்டேன்

ஓ ஹோ என் கனவிலே

ஓர் இருதயப்பெயர்ச்சியைக் கண்டேனே!


அனாமிகா ஹே அனாமிகா

அடிமன வெளிகளில் அனாமிகா

அனாமிகா ஹே அனாமிகா

அலையென அலைந்திடும் அனாமிகா


அனாமிகா ஹே அனாமிகா

அடைமழைக்குடை என அனாமிகா

அனாமிகா ஹே அனாமிகா

அறையினில் பிறையென அனாமிகா

_________________________________________


>யாரோடும் காணா ஒன்றை

>ஏனுன்னில் நானும் கண்டேன்?


ஹே உன் உடல்மொழி

காதல் மொழியுதே!


>ஊரோடு ஏனோ இன்று

>வண்ணங்கள் கூடக் கண்டேன்


ஹே உன் எதிரொளி

நெஞ்சில் பதியுதே!


>தினசரி கனவதன் உணவென

>உனைதரும் நினைவுகள் தேக்குகிறேன்! - உன்

>அரைகுறை உரைகளை கரையுமுன்

>உறைசிறை அறைகளில் பூட்டுகிறேன்!


ஹே ஹே உன் அருகிலே

நொடிகளின் இடைவெளி பெறுகிடக் கண்டேன்

ஓ ஹோ என் கனவிலே

ஓர் இருதயப்பெயர்ச்சியைக் கண்டேனே!


_______________________