மோகனா மூவீஸ்
மௌனகுரு
அனாமிகா அனாமிகா
இசை : தமன்
இயக்கம் : சாந்தகுமார்
குரல் : கார்த்திக், ஹரிணி
_________________________________
அனாமிகா ஹே அனாமிகா
அடிமனவெளிகளில் அனாமிகா
அனாமிகா ஹே அனாமிகா
அலையென அலைந்திடும் அனாமிகா
அனாமிகா ஹே அனாமிகா
அடைமழைக்குடை என அனாமிகா
அனாமிகா ஹே அனாமிகா
அறையினில் பிறையென அனாமிகா
>என் இதயத் திசைமானி >காட்டுகின்ற திசையில் நீ >என்னவென்று அவதானி >காதல்தானா?
>உன் விழியில் வாழ்வேனா >உன் நிழலில் வீழ்வேனா >கேள்விகேட்கும் நெஞ்சோடு >காதல்தானா?
ஹே ஹே உன் அருகிலே நொடிகளின் இடைவெளி பெருகிடக் கண்டேன் ஹே ஹே உன் அருகிலே புதுஒரு உறவினை அரும்பிடக் கண்டேன் ஹே ஹே என் அருகிலே உனைஉனை நீயே விரும்பிடக் கண்டேன் ஓ ஹோ என் கனவிலே ஓர் இருதயப்பெயர்ச்சியைக் கண்டேனே! |
அனாமிகா ஹே அனாமிகா அடிமன வெளிகளில் அனாமிகா அனாமிகா ஹே அனாமிகா அலையென அலைந்திடும் அனாமிகா
அனாமிகா ஹே அனாமிகா அடைமழைக்குடை என அனாமிகா அனாமிகா ஹே அனாமிகா அறையினில் பிறையென அனாமிகா _________________________________________ |
>யாரோடும் காணா ஒன்றை >ஏனுன்னில் நானும் கண்டேன்?
| ஹே உன் உடல்மொழி காதல் மொழியுதே!
| >ஊரோடு ஏனோ இன்று >வண்ணங்கள் கூடக் கண்டேன் |
ஹே உன் எதிரொளி நெஞ்சில் பதியுதே! |
>தினசரி கனவதன் உணவென >உனைதரும் நினைவுகள் தேக்குகிறேன்! - உன் >அரைகுறை உரைகளை கரையுமுன் >உறைசிறை அறைகளில் பூட்டுகிறேன்! |
ஹே ஹே உன் அருகிலே நொடிகளின் இடைவெளி பெறுகிடக் கண்டேன் ஓ ஹோ என் கனவிலே ஓர் இருதயப்பெயர்ச்சியைக் கண்டேனே! |
|
9 comments:
Hi Mr. Karky, I love your lyrics because you are introducing new words:-) I am learning lot of new words from your lyrics. If you dont mind can u please explain to me the meaning of this line "தினசரி கனவதன் உணவென
உனைதரும் நினைவுகள்
தேக்குகிறேன்! - உன்
அரைகுறை உரைகளை கரையுமுன்
உறைசிறை அறைகளில் பூட்டுகிறேன்.
Thank You and All the very best :-)
Hey Karky.... really nice! As asked by Kokilah, can you please explain those lines?
Thank you Kokilah & Meenakshi. The lines mean "I am reserving the thoughts about you to feed my daily dreams. I lock your incomplete sentences in frozen cells inside me before they disappear in air"
To be noted, the male lead in the plot is silent person. A person of very few words. The girl wants to capture all thoughts about him and the few words he utters.
Thank you again for asking. Happy to see people interested in lyrics.
/உன்
அரைகுறை உரைகளை கரையுமுன்
உறைசிறை அறைகளில் பூட்டுகிறேன்/
நல்ல புத்துணர்வான வார்த்தை அமைப்பு.
கார்க்கியின் ரெப்ரெஷ் மீட்டரிலும் சரி, கேட்க்கும் சாமானியர் நெஞ்சிலும் சரி, இந்த பாடல் அதிக படிநிலை பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
வாழ்த்துக்கள் கார்க்கி!!!
Simply superb :-) You have inspired to read more tamil books :-)Ur tamil vocabulary is simply superb :-) Thanks and keep writting more and more;-)
Anbudan,
Kokilah Kanniappan :-)
// >தினசரி கனவதன் உணவென
>உனைதரும் நினைவுகள் தேக்குகிறேன்! - உன்
>அரைகுறை உரைகளை கரையுமுன்
>உறைசிறை அறைகளில் பூட்டுகிறேன்!
ஹே ஹே உன் அருகிலே
நொடிகளின் இடைவெளி பெறுகிடக் கண்டேன்//
loved these lines ... good one from you again
அருமையான வார்த்தை ப்ரயோகம்... உங்களிடம் எப்போதும் புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ளலாம்...அதனை எவ்வளவு தெளிவாக தேடி பிடித்து அழகாக அமைக்கின்றீர்கள். பிளாகில் பகிர்ந்தமைக்கு நன்றி திரு.கார்க்கி.
irudhaya peyarchi - amazing
what is uraisirai...
இடைவெளி பெறுகிட-...
பெருகிட என்பது தானே சரி ?
புதுப்புது வார்த்தைகளின் பிரயோகம் தங்கள் பாடல்களை பிறிதிலிருந்து பிரித்துக் காட்டுகிறது.
மீன்குஞ்சு நீங்கள் ... சொல்லவா வேண்டும் தமிழ்க்கடலில் நீந்தி வர ?
Post a Comment