Friday, May 04, 2012

[lyric] கேளாமலே


Feather Touch Entertainment
தடையறத் தாக்க

கேளாமலே 
இசை : தமன்
இயக்கம் : மகிழ் திருமேனி 
குரல் : ஆலாப் ராஜு, ரீடா
____________________________



கேளாமலே கேளாமலே
பாய்கிறாய் எனக்குள்ளே!
நாளேழுமே நாளேழுமே
தோய்கிறாய் எனக்குள்ளே!


மேலும் கீழும் மேலும் கீழும்
அலைகளின் மடியிலே ...
மிதவையாய் நீ ஆகிறாய் 
வானம் ஏறி மேகம் கீறி
தூறல் தின்னும் பறவையாய்...
போகிறாய்....
_______________


> நீ கொட்டிச்சென்ற இன்பங்கள் அள்ளிட
> அண்டங்கள் போதாதென நான் கண்டேன்!
> நான் தேக்கி வைத்த தாகங்கள் சொல்லிட
> நேரங்கள் போதாதென நான் கண்டென்!
> யாரும் புகா ஆழத்தில் உன்னுள்ளே
> நீந்துதல் இன்பமென நான் கண்டேன்!


மேலும் கீழும் மேலும் கீழும்
அலைகளின் மடியிலே ...
மிதவையாய் நீ ஆகிறாய் 
வானம் ஏறி மேகம் கீறி
தூறல் தின்னும் பறவையாய்...
போகிறாய்....
_______________


> நான் நீங்கிச் செல்லும் நேரத்தில் நீயுன்னை
> உள்வாங்கிக் கொள்ளுகிறாய் நான் கண்டேன்!
> நான் சிந்திச்செல்லும் முத்தங்கள் வீழும்முன்
> நீ தாங்கிக் கொள்ளுகிறாய் நான் கண்டென்!
> ஆடைகளை மீறினாய் நெஞ்சுக்குள்
> ஈரமாய் மாறுகிறாய் நான் கண்டேன்!


மேலும் கீழும் மேலும் கீழும்
அலைகளின் மடியிலே ...
மிதவையாய் நீ ஆகிறாய் 
வானம் ஏறி மேகம் கீறி
தூறல் தின்னும் பறவையாய்...
போகிறாய்....
___________________

[lyric] காலங்கள்


Feather Touch Entertainment
தடையறத் தாக்க

காலங்கள் 
இசை : தமன்
இயக்கம் : மகிழ் திருமேனி 
குரல் : சின்மயி, ஜாவெத் அலி
____________________________



காலங்கள்... கண்முன்
பறந்தோடக் காணுகிறேன்
ஆனாலும்... உந்தன்
நெருக்கத்தில் நாணுகிறேன்


> நாளும் நாளும் உன் மேல்
> எந்தன் காதல் கூடினேன்
> நீளும் பாதை எங்கும்
> உந்தன் கைகள் நாடினேன்


எங்கும் பூவில் வீதியா?
நீ என் வாழ்வின் மீதியா?
_____________


நிலவுகள் நகர்ந்திட
நினைவுகள் வளர்ந்தன அன்பே!
கனவுகள் பகிர்ந்திட
விழிகளும் அறிந்தன அன்பே!


> விரிந்ததோ விரிந்ததோ
> ஆளுக்கொரு பூச்சிறகு
> யுகங்களைக் கடந்திட...


விரல் கோர்த்திடும் பயணங்கள்
எளிதினில் முடிவதில்லை


எங்கும் பூவில் வீதியா?
நீ என் வாழ்வின் மீதியா?
______________