Tuesday, April 03, 2012

[lyric] வீசும் வெளிச்சத்திலே


PVP Cinemas
நான் 

வீசும் வெளிச்சத்திலே
இசை : மரகதமணி
இயக்கம் : ராஜமௌலி
குரல் : கார்த்திக், சாஹிதி 
____________________________

வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்.

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

நுண்சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே
என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா?

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?

உன் பூதக் கண்ணாடி
தேவையில்லை
என் காதல் நீ பார்க்க
கண் போதுமே

முத்தங்கள் தழுவல்கள்
தேவையில்லை
நீ பார்க்கும் நிமிடங்கள்
அது போதுமே

கோபம், ஏக்கம், காமம், வெட்கம் 
ஏதோ ஒன்றில் பாரடி...

ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

[lyric] கொஞ்சம் கொஞ்சம்


PVP Cinemas
நான் 

கொஞ்சம் கொஞ்சம்
இசை : மரகதமணி
இயக்கம் : ராஜமௌலி
குரல் : விஜய் பிரகாஷ் 
________________________

கொஞ்சம் உளறிக் கொட்டவா?
கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா?
கொஞ்சம் வாயை மூடவா?
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா?

கொஞ்சம் வழியை கேட்டேன் - அடி
கொஞ்சம் கொஞ்சம் வலிகள் தருகிறாய்

நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதயமூலையில்
நானே இருப்பேன்.

கொஞ்சம் உள்ளம் சிந்திடு
கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு
கொஞ்சம் பார்வை வீசிடு
கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு

கொஞ்சம் திறக்கச் சொன்னேன் - அடி
கொஞ்சம் கொஞ்சம் மறைக்கப் பார்க்கிறாய் 

ஏ கஞ்ச வஞ்சியே
உன் நெஞ்சில் ஏன் தடை?
இப்போலி வேலியை
இன்றாவது உடை

காக்கை தூது அனுப்பிடு
காற்றாய் வந்துன் கூந்தல் கோதுவேன்
ரெக்கை ஏதும் இன்றியும்
தூக்கிக்கொண்டு விண்ணில் ஏறுவேன்

இன்னும் ஜென்மம் கொண்டால் - உன்
கண்முன் தோன்றி இம்சை பண்ணுவேன்

என் இதயக் கூட்டிலே
உன் இதயம் கோர்க்க வா!
ஈருயிரை சேர்க்க வா!
ஒன்றாகிட வா!

[lyric] லாவா லாவா


PVP Cinemas
நான் 
லாவா லாவா
இசை : மரகதமணி
இயக்கம் : ராஜமௌலி
குரல்கள் : அச்சு ஷிவானி
_______________________

லாவா லாவா லாவா
நெஞ்சிலே லாவா
எரிமலைப் பெண்ணே
இன்னும் அருகில் வா!

ஆங்காங்கே பார்வை மேய
எங்கெங்கோ ரத்தம் பாய வைத்தாயா? 
ஓ.. வதைத்தாயா?

உன் துளி அழகில்
நான் தொலைந்தேன்
உன் முழு அழகில்
நான் அழிவேன்

ஆனாலும் ஆனாலும்
உன்னை அடைந்திடுவேன்

[lyric] ஈ டா


PVP Cinemas
நான்
ஈ டா ஈ டா
இசை : மரகதமணி
இயக்கம் : ராஜமௌலி
குரல்கள் : ரஞ்சித் 
___________________________

நானி என் பேரு
நான் குட்டி ஈ தான் பாரு
அணு குண்டு போடும் வண்டு நானு
தொடங்கிடுச்சு போரு
உன் கோட்டைக்குள்ள வாறேன்
உனை வேட்டையாடப் போறேன்
உன் கண்ணுக்குள்ள கைய விட்டு
ஆட்டிப்பாக்கப் போறேன்

ஈ டா ஈ டா ஈ டா!
கண்ணு ரெண்டில் தீடா!
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா!


பொறி என்ன செய்யும்,
காட்டுக்குள்ள விட்டா?
ஒட்டுமொத்தம் சுட்டெரிச்சு
சாம்பலாக்கிடாதா?
துளி என்ன செய்யும்,
தொண்டைக்குள்ள விட்டா?
மண்டைக்குள்ள நஞ்ச ஏத்தி
உன்னை சாய்ச்சிடாதா?

இந்த அண்டம் கூட தொடங்கும் முன்ன வண்டின் அளவுதான்
ஈன்னு என்ன பாத்தான்
என்ன பூச்சியில சேத்தான்
அங்க தான அவன் தோத்தான்
நான் மூச்சுக்குள்ள நச்சு பாய்ச்ச வந்திருக்கும் சாத்தான்


ஈ டா ஈ டா ஈ டா!
கண்ணு ரெண்டில் தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா


நான் உடனடியா செஞ்சு முடிக்க 
பத்து விஷயம் கிடக்குது
todo... todo... todo todo...
one உன்ன கொல்லணும்
two உன்ன கொல்லணும்
three உன்ன கொல்லணும்
four உன்ன கொல்லணும்
five உன்ன கொல்லணும்
six உன்ன கொல்லணும்
seven உன்ன கொல்லணும்
eight உன்ன கொல்லணும்
nine உன்ன கொல்லணும்
ten உன்ன கதற கதற கதற கதற
பதற பதற பதற பதற 
சிதற சிதற வெட்டி வெட்டி கொல்லணும்

ரெக்க ரெக்க ரெக்க 
ரெக்க ரெண்டின் ராகம் கேக்குதா?
உன் செவியோரம் மரண ஓலம் 
எட்டிப் பாக்குதா?
ஈயோட காலு கூட 
ஈட்டி போல மாறும்
உன கொன்னு தீத்த பின்ன தான்
என் கொலவெறியும் தீரும்

செத்துப் பொழச்சு எமன பாத்து
சிரிச்சவன் நானி!
நெய்யு மேல மொய்க்க
ஈயா நானு? இல்ல
உன் நெஞ்சில் முள்ள தைக்க
பேயா வந்த தொல்ல
உன் எல்லைக்குள்ள உன்ன கொல்ல அவதரிச்ச வில்லன்


ஈ டா ஈ டா ஈ டா!
கண்ணு ரெண்டில் தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா!