Friday, July 22, 2011

[lyrics] திறந்தேன் திறந்தேன்

படம் : வந்தான் வென்றான்

இசை : தமன்

இயக்கம் : கண்ணன்


திறந்தேன் திறந்தேன் நீ முட்டித் திறந்தேன்

என்னுள்ளே நீ வந்து தீ மூட்டத் திறந்தேன்

உறைந்தே உறங்கும் என் உள்ளச் சில்லெல்லாம்

ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்கத் திறந்தேன்


தொலை தொலை என எனை

நானே கேட்டுக்கொண்டேனே

என் மமதையினை!


நுழை நுழை உனை என

நானே மாற்றிக்கொண்டேனே

என் சரிதையினை!


>துளையேதும் இல்லாத தேன் கூடோ

>நுழைவேதும் இல்லாத ஊன் காடோ

>விளைவேதும் இல்லாத மாநாடோ

>உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ?


-----

முகத்திரை திருடினாய்

திரைக் கதைப்படி

அகத்தினை வருடினாய்

அதைக் கடைப்பிடி


>பெண்ணே உன்னைத் துறவி என்றுதான்

>இந்நாள் வரை குழம்பிப் போயினேன்


துறவறம்

துறக்கிறேன்


>துளையேதும் இல்லாத தேன் கூடோ

>நுழைவேதும் இல்லாத ஊன் காடோ

>விளைவேதும் இல்லாத மாநாடோ

>உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ?


----

உரிமைகள் வழங்கினேன்

உடை வரை தொடு

மருங்குகள் மீறியே

மடை உடைத்திடு


>ஓராயிரம் இரவில் சேர்த்ததை

>ஓரீர் நொடி இரவல் கேட்கிறாய்!


பொறுமையின்

சிகரமே!


>துளையேதும் இல்லாத தேன் கூடோ

>நுழைவேதும் இல்லாத ஊன் காடோ

>விளைவேதும் இல்லாத மாநாடோ

>உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய் தானோ?


4 comments:

நடராஜன் said...

மும்முத்துக்கள் அருமை! முத்தின் படைப்பல்லவோ! சந்தங்கள் வரிக்கு வரி சத்தம் போட்டு கவனிக்க வைக்கின்றது!

Geeths said...

Sir,

In the following lines:

"marungugaL meeRiyae
madai udaiththidu",

what is the meaning of "marungugaL"? Could you please explain.

Tnx.

-Sangeetha

KRISHNA said...


துளையேதும் இல்லாத தேன் கூடோ

நுழைவேதும் இல்லாத ஊன் காடோ

விளைவேதும் இல்லாத மாநாடோ

உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ?

-
இந்த பாடல் வரிகளுக்கான முழுதான அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு விளக்கம் தர முடியுமா?

Madhan Karky said...

Please check http://www.karky.in/desk/lyrics.jsp?l=20
Translation is provided. Let me know if you need more clarity.