Showing posts with label vandhaan vendraan. Show all posts
Showing posts with label vandhaan vendraan. Show all posts

Friday, July 22, 2011

[lyrics] முடிவில்லா மழையோடு

படம் : வந்தான் வென்றான்

இசை : தமன்

இயக்கம் : கண்ணன்


முடிவில்லா மழையோடு

விளையாடும் எங்கள் கூட்டம்

அடிவானின் நிறமெல்லாம்

விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்

விடிகாலை பனியோடு நம்

புன்னகையின் மூட்டம்

அடிநெஞ்சில் உற்சாகம்

கற்பூரம் போலே பற்றட்டும்


சீறிப் பாயும் வெள்ளம் என

உள்ளம் துள்ளி ஆடட்டும்!

காட்டுத் தீயின் பந்தாய் - என்

கால்கள் இங்கே ஓடட்டும்!


அடி வைத்தால் அதிரட்டும்

வான் மீன்கள் உதிரட்டும்

போராடும் மட்டும்

ஏதும் எட்டும்

மேகம் முட்டிக் கொட்டட்டும்!


-----

உன் பாதம் கொஞ்சம் தேயாமல்

உன் வாழ்க்கை என்றும் மாறாது!

கண் ஈரம் கொஞ்சம் காயாமல்

உன் காயம் ஒன்றும் ஆறாது!


தோல்விகள் ஆயிரம் எல்லாம்

தோரணம் கோர்த்திடு தோழா!

வெற்றியின் வாசலைச் சேர

காரணம் பார்த்திடு தோழா!


----

நம் பாதை செல்லும் நீளந்தான்

நம் புன்னகையின் நீளங்கள்

நாம் ஏறி வரும் ஆழந்தான்

நம் இன்பங்களின் ஆழங்கள்


சேற்றிலே நீ விழுந்தாலும்

தாமரை மாலைகள் மாட்டிடு

நேற்று நீ போர் இழந்தாலும்

நாளை உன் நாளெனக் காட்டிடு

[lyrics] ஏஞ்சோ

படம் : வந்தான் வென்றான்

இசை : தமன்

இயக்கம் : கண்ணன்


மின் நிலவிவள் - ஒரு

வெண் ஒளித்திரள்

கண்கள் சிமிட்டிடும் - அந்த

நியுயார்க் சிலையிவள் - Yo!


ஏஞ்சோ - ஒரு பனித்துளிப் பதுமையோ?

ஏஞ்சோ - ஒரு புதுவகைப் புதுமையோ?


இவள் தும்பியோ ஒரு தும்பையோ?

ஜீன் டாப்ஸிலே ஒரு பெப்ஸியோ?

கேட்வாக்கிடும் ஒரு சேட்டையோ?

வாய்ப்பூட்டில்லா பூ மூட்டையோ?


ஹே வீணை மேலே பூனை போலே
பூமி மேலே வந்தாள் - ஹோ...

ஹே மௌனம் இல்லா நாணம் இல்லா
ஊனம் கொண்டே வந்தாள்


ஒரு வேளை திருவாயை.
திறவாமல். இருந்தாலே...

இவள் அமைதிக்கு நோபல் தர
உலகமே முடிவெடுக்கும்


ஹே ஏஞ்சோ

நீ விண்மீனின் பிஞ்சோ

ஹே ஏஞ்சோ...

நீ கொஞ்சும் மென் பஞ்சோ


----

இவள் விழிக் கூரில்

தினந்தினம்

கிழிபடும் நூறு

இருதயம்

ஆடை மோதி ஊரில் பாதி

அவதியில் அலைகிறதோ?


ஹே

நீடில் இடை மாடல் போலே

ஈடில்லாமால் வந்தாள் - ஹோ

ஐபாடில் இல்லா பாடல் ஒன்றை

காதில் பாட வந்தாள்!


நெப்ட்யூனே... என்றாலும்.

பண்டோரா சென்றாலும்

இவள் அழகுக்கு நிகர் என

அகிலத்தில் உயிர் இல்லையே!


-----

ஹீப்ரூ இலத்தீனக் கவிதைகள்

eyebrow மொழியோடு தோற்றிடும்


Ballet Flamenco நடனங்கள்

பாவை விழியோடு தோற்றிடும்


waltz 'n jazz எல்லாம்

இவள் பேச்சில் தோற்றிடும்


செங்காந்தள் ஆம்பல்

ஊதா ரோஜா நொச்சிப் பூவும்

இவள் மூச்சில் தோற்றிடும்


ஹோ ஏஞ்சல் ரேஞ்சில் ஏஞ்சோ.!

[lyrics] திறந்தேன் திறந்தேன்

படம் : வந்தான் வென்றான்

இசை : தமன்

இயக்கம் : கண்ணன்


திறந்தேன் திறந்தேன் நீ முட்டித் திறந்தேன்

என்னுள்ளே நீ வந்து தீ மூட்டத் திறந்தேன்

உறைந்தே உறங்கும் என் உள்ளச் சில்லெல்லாம்

ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்கத் திறந்தேன்


தொலை தொலை என எனை

நானே கேட்டுக்கொண்டேனே

என் மமதையினை!


நுழை நுழை உனை என

நானே மாற்றிக்கொண்டேனே

என் சரிதையினை!


>துளையேதும் இல்லாத தேன் கூடோ

>நுழைவேதும் இல்லாத ஊன் காடோ

>விளைவேதும் இல்லாத மாநாடோ

>உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ?


-----

முகத்திரை திருடினாய்

திரைக் கதைப்படி

அகத்தினை வருடினாய்

அதைக் கடைப்பிடி


>பெண்ணே உன்னைத் துறவி என்றுதான்

>இந்நாள் வரை குழம்பிப் போயினேன்


துறவறம்

துறக்கிறேன்


>துளையேதும் இல்லாத தேன் கூடோ

>நுழைவேதும் இல்லாத ஊன் காடோ

>விளைவேதும் இல்லாத மாநாடோ

>உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ?


----

உரிமைகள் வழங்கினேன்

உடை வரை தொடு

மருங்குகள் மீறியே

மடை உடைத்திடு


>ஓராயிரம் இரவில் சேர்த்ததை

>ஓரீர் நொடி இரவல் கேட்கிறாய்!


பொறுமையின்

சிகரமே!


>துளையேதும் இல்லாத தேன் கூடோ

>நுழைவேதும் இல்லாத ஊன் காடோ

>விளைவேதும் இல்லாத மாநாடோ

>உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய் தானோ?