Y Not Entertainment
காதலில் சொதப்புவதெப்படி
தவறுகள் உணர்கிறோம்
இசை : தமன்
இயக்கம் : பாலாஜி
குரல் : தமன்
_______________________________________________
கையை விட்டுக் கையை விட்டு நழுவி
கீழ் விழுந்துக் கீழ் விழுந்து கிடக்கும் - நீ
கீரல்களைக் காயங்களை வருட - அது
மீண்டும் உந்தன் கையில் வரத் துடிக்கும்
*
தவறுகள் உணர்கிறோம்
உணர்ந்ததை மறைக்கிறோம்
மமதைகள் இறந்திட
மறுபடி பிறந்திடுவோம்
*
ஒரே வலி...
இரு இதயத்தில் பிறக்குதே
ஒரே துளி...
இரு விழிகளில் சுரக்குதே
ஒரே மொழி...
நீ இழந்ததை அடைந்திட
அணைந்ததை எழுப்பிட
உலகத்தில் உண்டு இங்கே....
*
சுவர்களை எழுப்பினோம் நடுவிலே,
தாண்டிச் செல்லத் தானே இங்கு முயல்கிறோம்.
உறவுகள் உடைந்திடும் எளிதிலே,
மீண்டும் அதை கோர்க்கத்தானே முயல்கிறோம்.
*
சில உரசலில் பொறி வரும்
சில உரசலில் மழை வரும்
நாம் உரசிய நொடிகளில்
பரவிய வலிகளை
மறந்திட மறுக்கிறோம்
______________________________________________