Showing posts with label எந்திரன். Show all posts
Showing posts with label எந்திரன். Show all posts

Friday, August 20, 2010

[lyric] Boom Boom Robo Da

Boom Boom Roboda

Zoom Zoom Roboda


ஐசக் அசிமொவின்

வேலையோ ரோபோ?

ஐசக் நியூட்டனின்

லீலையோ ரோபோ?

ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்

மூளையோ ரோபோ?


Hey Robo… Yo Robo…
இன்பா நண்பா come on lets go…


Boom Boom Roboda

Zoom Zoom Roboda


சிக்கி முக்கி அக்கினி வழிவழியே

ஒருவனின் காதலில் பிறந்தவனோ


ஏ…. எஃகினிலே…பூத்தவனோ

எங்களின் காதலைச் சேர்த்தவனோ


தவமின்றி வரங்கள் தருவதனால்

மின்சாரக் கண்ணனோ

சிட்டி சிட்டி ரோபோ

சுட்டி சுட்டி ரோபோ

பட்டித் தொட்டி எல்லாம்

நீ பட்டுக் குட்டியோ


Boom Boom Roboda

Zoom Zoom Roboda


குட்டிக் குட்டி பட்டனில் வாய்மூடும்

காதலி இதுபோல் கிடையாதோ?


ஏ… சொல்வதெல்லாம் கேட்டுவிடும்

காதலன் இதுபோல் அமையாதோ?


திருமணத் திருநாள் தெரியும் முன்னே - நீ

எங்கள் பிள்ளையோ ?

ஆட்டோ ஆட்டோக்காரா - ஏ

ஆட்டோமேட்டிக் காரா

கூட்டம் கூட்டம் பாரு - உன்

Autograph-உக்கா

Boom Boom Roboda

Zoom Zoom Roboda

Saturday, July 31, 2010

[lyric] இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ

முதல்முறை காதல் அழைக்குதோ


பூஜ்ஜியம் ஒன்றோடு

பூவாசம் இன்றோடு

மின்மீன்கள் விண்னோடு

மின்னல்கள் கண்ணோடு


கூகுல்கள் காணாத

தேடல்கள் என்னோடு

காலங்கள் காணா காதல்

பெண் பூவே உன்னோடு


iRobo உன் காதில்

ஐ லவ் யூ சொல்லட்டா?


>I am a super girl

>உன் காதல் rapper girl


என்னுள்ளே எண்ணெல்லாம்

நீதானே நீதானே


உன் நீலக் கண்ணோரம்

மின்சாரம் பறிப்பேன்

என் நீலப் பல்லாலே

உன்னோடு சிரிப்பேன்


என் engine நெஞ்சோடு

உன் நெஞ்சை அணைப்பேன்

நீ தூங்கும் நேரத்தில்

நான் என்னை அணைப்பேன்


எந்நாளும் எப்போதும்

உன் கையில் பொம்மையாவேன்


>கட்டிக்கொள்ளும் போதும்

>தொட்டுப்பேசும் போதும்

>ஷாக்கடிக்கக் கூடும்


>காதல் செய்யும் நேரம்

>மோட்டார் வேகம் கூடும்

>இரவில்... நடுவில்...

>பேட்டரிதான் தீரும்


மெமரியில் குமரியை

தனிச் சிறை பிடித்தேன்

shutdown-ஏ செய்யாமல்

இரவினில் துடித்தேன்


sensor எல்லாம் தேயத்தேய

நாளும் உன்னை படித்தேன்

உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன்


எச்சில் இல்லா எந்தன் முத்தம்

சர்ச்சை இன்றிக் கொள்வாயா?

ரத்தம் இல்லாக் காதல் என்று

ஒத்திப் போகச் சொல்வாயா?


உயிரியல் மொழிகளில்

எந்திரன் தானடி

உளவியல் மொழிகளில்

இந்திரன் நானடி


சாதல் இல்லா சாபம் வாங்கி

மண்மேலே வந்தேனே

தேய்மானமே இல்லா

காதல் கொண்டு வந்தேனே


>முட்டாதே ஓரம்போ - நீ

>காலைச் சுத்தும் பாம்போ

>காதல் செய்யும் ரோபோ

>தேவையில்லை போ போ

Tuesday, June 30, 2009

[movie] My little role in Endhiran : The Robot



I've been working with Shankar's Endhiran since August 2008. I would like to share how it all happened. Around May 2008,
I Introduced myself to Mr. Shankar as Dr. Karky, working as a scientist in Anna University with fair knowledge in Robotics and Artificial Intelligence. As my father was not very much interested in me working in films, I tried my best to shadow my other identity. I SMSed Mr. Shankar asking if I could take up Sujatha's role in Endhiran. I waited for a week, and then called him regarding the same. A few weeks from then, he invited me to his office. He was taken by surprise when he got to know that I was Poet Vairamuthu's son. After an hour's discussion he asked me to be the technical coordinator for the movie. There it all started. In this last one year, I have contributed a little to this huge project in a few areas. I also penned my first song, to AR Rahman's tune, for this movie. I thank Mr. Shankar whole heartedly for giving me this opportunity to work in his magnum opus with some of the world's leading technicians.