Gemini Film Circuit
நண்பன்
கண் முன்னே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
குரல் : ஆலாப் ராஜு
இயக்கம் : ஷங்கர்
___________________________
எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!
யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!
இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன்
எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்
கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா?
3 comments:
யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!
I Love these lines sir.
சில நேரங்களில்
எங்கோ ஒரு மூலையில்
நமக்கான கவிதை
எழுதப்படுகிறது!
சொல்ல தவிக்கும் உணர்வினை
முகம் தெரியா கவிஞர் ஒருவர்
உரைத்து விடுகையில்
ஊமையாகிப் போன
என் உணர்வுகள்
கண்ணீராய் வெளியேறி விடுகின்றன.
Thanks for these lovely lyrics and Good Luck :-)
யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!
Awesome sir... naan mothalla sollanum nu nenachen... kokilah munthitanga... :-)
Excellent Mr.Karki.Each and every lines are spectacular. Superb. Expecting a more.
- Satish
Post a Comment