Thursday, September 20, 2012

[lyric] ஒன்றாக முளைத்தோம்


Sax Pictures
சாருலதா
ஒன்றாக முளைத்தோம்
இசை : சுந்தர் சி பாபு
இயக்கம் : பொன்குமரன்
குரல் : மஹதி 
_________________________________

ஒன்றாக முளைத்தோம்
ரெண்டாக சிரித்தோம் 
ஒற்றைக் காம்பில் ரெட்டைப் பூவானோம்
இணையே பிரியா - துளி 
தனிமை அறியா...
நம் போலே யாரும் இல்லை இவ்வுலகில்!


தாயன்பில் என்றும் பேதமில்லை
ஆளுக்கோர் தோள் தந்து தூங்கச்சொல்வாள்!
தாயைப் போல் தெய்வம் ஏதுமில்லை
ஆளுக்கோர் கண் கொண்டு காவல் நிற்பாள்!
பாடத்தில் காணாத வாழ்க்கையை
தாயே சொல்லித்தருவாள்!
ஊருக்குள் காணாத அன்பையும்
தாயே அள்ளித்தருவாள்!

நான் என்ற சொல்லே தேவையில்லை!
கண்ணாடி பார்த்திடும் வேலை இல்லை!
நாற்காலிப் பூக்கள் எங்களுக்கு 
நெஞ்சுக்குள் இரகசியம் வாய்ப்பேயில்லை!
தோளுக்குத் தோள் நின்று ஆடுவோம்
சோகம் அறிந்ததில்லை!
பாதைகள் ரெண்டாகும் போதிலும்
நாங்கள் பிரிந்ததில்லை!
______________________________________


[lyric] வாஞ்சை மிகுந்திட


Sax Pictures
சாருலதா
வாஞ்சை மிகுந்திட
இசை : சுந்தர் சி பாபு
இயக்கம் : பொன்குமரன்
குரல் : ரிடா
_______________________________



வாஞ்சை மிகுந்திட
ஆஞ்சை இடுகிறேன்
கொஞ்சம் பணிந்திடு - இனிவரும்
ஏல்வை முழுவதும் 
சால்வை இவளெனத் 
தோளில் அணிந்திடு

உனக்கென... உலகையே
உதறினேன் பார்த்திடு....
______

மாலை ரெண்டு மாற்றவில்லை
தாலி ஒன்றும் ஏற்றவில்லை
நீயும் நானும்  ஒன்றாய் வாழ்கின்றோம்

ஊரைப் பார்க்கத் தோன்றவில்லை
நாளை மீதும் நாட்டம் இல்லை
அன்றில் போலே ஒன்றாய் வாழ்கின்றோம்

ரேகைகள் ரெண்டில் ரெக்கைகள் நெய்தோம்
பறக்க வானேறினோம்
பூமியைச் சுற்றி முடித்ததாலே
புதிய கோள் தேடி நீயும் நானும் புகுந்திட...  (வாஞ்சை மிகுந்திட) 
______


பாதை எங்கே போகுமென்றே
சாலைப் பூக்கள் கேட்பதில்லை
பூக்கள் போலே வாழ்க்கை கொள்வோமா?

♂ 
பூவில் தோன்றும் வாசம் என்றும்
பாதை பார்த்துச் செல்வதில்லை
வாசம் போலே காற்றில் செல்வோமா?

உரிமை என்றே உடைமை என்றே
எனக்கு நீ தோன்றினாய்
இளமைக் காட்டின் செழுமை யாவும்
முழுமையாய் உந்தன் தலைமையில் திகழ்ந்திட... (வாஞ்சை மிகுந்திட)
______

[lyric] கடவுள் துகள்


Sax Pictures
சாருலதா
கடவுள் துகள்
இசை : சுந்தர் சி பாபு
இயக்கம் : பொன்குமரன்
குரல் : சுச்சித் சுரேசன்
_________________________________


எடையில்லா கடவுள் துகளைப் போலே
மிதக்கின்றேன் வெள்ளை வண்ண வானத்திலே
தடையில்லா வழியில் பாயும் காற்றாய்
மனதுள்ளே கொள்ளை இன்பம் பாய்கிறதே 
இனியேதும் அச்சங்கள் இல்லை
இனியேதும் துன்பங்கள் இங்கில்லை
முடிவில்லா காதல் மட்டும் தான்.... 
_____


புன்னகைகள் நான் தேடுகிறேன்
உள்ளுக்குள்ளே அவை வைத்துக்கொண்டே
சொர்கங்களை நான் தேடுகிறேன் 
என்னருகே உன்னை வைத்துக்கொண்டே

ஒட்டிக்கொண்டே பிறந்திடும் இரு பிள்ளைகளாய்
இன்பத்துடன் துன்பம் பிறக்கும்!
காதல் கொண்டே
இந்த காலம் என்ற கத்தியால்
துன்பத்தை வெட்டி எறிந்தோம்!
_____


தெய்வங்களை நான் நம்புவதே
கண்ணில் உன்னை காணச் செய்ததற்கே
வேதியலை நான் நம்புவதே
உன்னை என்னை ஒன்று சேர்த்ததற்கே

முத்தந்தின்னி பறவை ஒன்றின்று என்னைச் சுற்றி
கொத்துதிங்கே என்ன செய்வேனோ?
வெட்கத்தினை
கேட்டு நச்சரித்து நிற்குதே
யாரோடு நியாயம் கேட்பேனோ?
_____